புஸ்ஸி போடும் புதுக்கணக்கு! தவெகவில் வெடித்த கலகம்..தூக்கி அடித்த விஜய்!

தவெக தலைவர் விஜயா? இல்லை புஸ்ஸி ஆனந்தா? என்ற விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில், இனி தவெகவின் ஒட்டுமொத்த முகமாக உருவெடுக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் புஸ்ஸி ஆனந்தின் சில செயல்பாடுகள் விஜய்க்கு அதிருப்தியை கொடுத்ததால் உடனடியாக களத்தில் இறங்கிய விஜய் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

Continues below advertisement

மாவட்ட செயலாளர்கள் நியமனம்

தவெகவின் பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் தான் நிர்வாகிகள் நியமனம் முதல் தலைவர்கள் சிலைக்கு மரியாதை செய்வது வரை கட்சியின் அனைத்து வேலைகளையும் கவனித்து வருகிறார்.  தலைவர் விஜய்க்கு அடுத்தபடியாக நிர்வாகிகளுக்கு தெரிந்த முகம் இவர் தான். மாவட்ட செயலாளர்களை நியமிப்பதிலும் ஆனந்தின் அழுத்தம் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.  இந்நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் 19 மாவட்டச் செயலார்களை விஜய் நியமித்தார். அப்போது ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும், பகுதி, பேரூர், ஒன்றிய செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு மாவட்டச் செயலாளர்கள் சில மாவட்டங்களில் லஞ்சம் கேட்பதாகப் புகார் வருவதாகவும், அப்படி யாராவது நடந்து கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் கண்டித்ததாகவும் தகவல் வெளியானது.

Continues below advertisement

அண்ணன் ஆனந்த் 

இந்த சந்திப்பின் போது தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை விஜய் வெளியில் அனுப்பி விட்டதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு என்ன காரணம் என்பது தொடர்பான பகீர் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, புஸ்ஸி ஆனந்த இனி தன்னுடைய பெயருக்கு முன்னால் இருக்கும் புஸ்ஸி என்பதை எடுத்து விட்டு, ஆனந்த் என்று தான் அழைக்க வேண்டும், இனி போஸ்டர் அல்லது கட் அவுட் அடித்தால் அதில் ஆனந்த் என்று தான் இருக்க வேண்டும், குறிப்பாக அண்ணன் ஆனந்த் என்பது கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு கட்டளை போட்டதாக சொல்லப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய்க்கு எதிராக புஸ்ஸி ஆனந்த் பேசியதாக விஜயின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியும் தவெக நிர்வாகி ஒருவரும் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியது. புஸ்ஸி ஆனந்தின் இந்த செயல்பாடு விஜய்க்கு தெரியவர, இதை அனுமதித்தால் தன்னுடைய அரசியல் வாழ்க்கை சரியாக இருக்காது என்பதால், ஆனந்திடம் இருந்து கட்சியை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்தில் விஜய் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Continues below advertisement