தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான புலவர் இந்திரகுமாரி காலமானார். அவரது மறைவுக்கு தி.மு.க. தலைவர்களும், தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


முன்னாள் அமைச்சர் மரணம்:


இவர் அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர். 1991-96 காலகட்டத்தில் இந்திரகுமாரி ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இவர் நாட்ரம்பள்ளி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வானவர். 2006ம் ஆண்டு இவர் தி.மு.க.வில் இணைந்தார். ஊழல் வழக்கில் இந்திரகுமாரிக்கும் அவரது கணவர் பாபுவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  மேலும், இந்திரகுமாரி மீது பள்ளி மாணவர்களுக்கான இலவசப் பொருட்களை வாங்கியதாகவும் ஊழல் வழக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தி.மு.க.வில் இணைந்த இவருக்கு இலக்கிய அணியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.