மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஓரிரு நாளில் நிரம்பிவிடும் என்பதால் கரையோற மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது மேட்டூர் அணையி நீர்மட்டம்  115 அடியினை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு ஓரிரு நாளில், அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியினை எட்டும் என்பதால், அணையில் இருந்து உபரிநீர் திறக்கபட வாய்ப்புள்ளது. இதனால், கரையோற மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






இது குறித்து நீர்வளத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று ( 15.07.2022 ) மாலை 4.00 மணியளவில் 115.730 அடியை எட்டியுள்ளது .தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஓரிரு தினங்களுக்குள் 120 அடியை எட்டும் என்றும் , எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது . எனவே காவிரி கரையோரம் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் , அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஏற்கனவே, நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 98,208 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 78,871 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு 82,642 கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில் அணை சீக்கிரமே நிரம்பிவிடும் என்பதால் கரையோற மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண