கடலில் மீன்வளத்தைப் பேணிக் காத்திட தமிழ்நாடு மாற்றும் புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்.15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரையிலும், மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த தடைக்காலத்தின்போது மீன்பிடி விசைப்படகுகள், இழுவலைப் படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பைச் சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தை சிரமமின்றி நடத்திச் செல்ல 2008-ம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது


முதல்வர் உத்தரவுப்படி நடப்பாண்டுக்கு 1.72 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடிதடைக்கால நிவாரணத் தொகைதலா ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இதற்காக ரூ.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை பகுதி மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதி ஆகியவற்றைச் சேர்ந்த 1 லட்சத்து 46 ஆயிரத்து 598 பயனாளிகளும், மேற்கு கடற்கரைப் பகுதி மாவட்டமான கன்னியாகுமரியைச் சேர்ந்த 25 ஆயிரத்து 402 பயனாளிகளும் ஆக மொத்தம் 1 லட்சத்து 72 ஆயிரம் பயனாளிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள். நிவாரணத் தொகை மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.




கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளுர், புதுச்சேரி ஆகிய 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என தடை விதிக்கப்படுகிறது. மீனவர்களின் தடைகாலம் மட்டுமல்லாமல் கொரோனா கோரத் தாண்டவத்தால் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சில்லறை விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை, இதன்காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் நலிவடைந்து உள்ளது. மீனவர்கள் கூறுகையில் எங்களது வாழ்க்கையை எவ்வாறு நடத்திச் செல்வது என்று தெரியாமல் இருப்பதாகவும், அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.




மீன்பிடி தடை காலம் குறித்து அசைவ பிரியர்கள் கூறுகையில், கடற்கரை பகுதிக்கு அருகே வசிப்பதால் காலம் காலமாக மீன்களை விரும்பி சாப்பிட்டு வருகிறோம். மீன்களில் புரோட்டீன் சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்திகள் இருப்பதால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிட்டு வருகிறோம். விடுமுறை நாட்களில் கொடுவா, வஞ்சிரம், சுறா, கேரை, ஷீலா, பாரை, திருக்கை, கருவவ்வால், வெள்வவ்வால், பெரிய கனவாய், மாஸ், முள் வாலை, பெரியவகை கார்த்திகை வாலை போன்ற மீன்களை விரும்பி சாப்பிடுவோம். இந்தநிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்து விட்டதால், விலை உயர்ந்த மீன்கள் கிடைப்பது மிகவும் அரிது என கவலையுடன் தெரிவித்தனர்.




 


மேலும் படிக்க:


ஒன்றல்ல... இரண்டல்ல... இன்றோடு 30 ஆண்டுகள்! பேரறிவாளனும் சிறை கம்பிகளும்!