கரூர் மாநகராட்சி உறுப்பினர்களுக்கு அரசு வழங்கும் முதல் மாத சம்பளம் ரூ. 10 ஆயிரம் பெற்றுக் கொண்டனர்.


 




 


மாமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் வழங்கிய தமிழக முதல்வருக்கு மாமன்ற கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேறப்பட்டது. கரூர் மாநகராட்சியின் கூட்டம் நடைபெற்று வருகிறது. மேயர் கவிதா கணேசன் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில்,  மக்கள் பிரதிநிதிகளான மாநகராட்சி உறுப்பினர்களுக்கு மாதம்தோறும்  ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி, கரூர் மாநகராட்சியின் 48 உறுப்பினர்களுக்கு  முதல் மாத சம்பளம் தலா ரூ.10 ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்பட்டது. இதனால், முக மலர்ச்சியில் உறுப்பினர்கள் உள்ளனர். 9 திமுக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மேயர் கவிதா கணேசன் துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.


 




மாமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் வழங்கிய தமிழக முதல்வருக்கு மாமன்ற கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேறப்பட்டது. கூட்டத்திற்கு முன்பு கரூர் மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் மேல் முறையீட்டு குழு உறுப்பினர்  மறைமுக தேர்தல் நடைபெற்றது. 9 திமுக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.


 


 




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.