பள்ளி மாணவர்கள் முதல் தேர்வில் தோல்வி அடைந்து விட்டோம் என்று வருத்தப்படாமல் அடுத்த தேர்வில் எழுதி வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற பெண்மணி நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்தார்.




 


 


கரூரில், 51 வயது மூதாட்டி 34 ஆண்டுகளுக்கு பிறகு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 3 பாடங்களுக்கு எழுதியிருந்தார். அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளார். ஜூலை 3- ஆம் தேதி  நடைபெற 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியானது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த ஷாகிலாபானு (51) என்பவர் ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கான  தேர்வு எழுதி இருந்தார். இதில், தமிழ் 35, கணிதம் 35, அறிவியல் பாடத்தில் 48 என மொத்தம் 118 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே, தமிழ், சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


 




 


 


கடந்த 12 ஆண்டுகளாக சத்துணவு திட்டத்தில் சமையலராக பணியாற்றி வந்த நிலையில், சத்துணவு அமைப்பாளர் பதவி உயர்வுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால், கடுமையாக முயற்சி செய்து படித்து 51 வயதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். படிப்புக்கு வயது தடையில்லை என நிரூபித்து காட்டியுள்ளார் இந்த பெண்மணி. இதுகுறித்து ஷாகிலாபானு கூறுகையில், “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பொழுது முதலில் தடுமாற்றமாகவும், கடினமாக இருந்தது. என்னுடைய மகன் படிப்பதற்கு ஊக்கமளித்து அனைத்து பாடங்களையும் சொல்லிக் கொடுத்தார். அதனால்தான், நான் தேர்வில் வெற்றி பெற்றேன். முதல் தேர்வில் எழுதி தோல்வி அடைந்து விட்டீர்கள் என்று மாணவர்கள் மனம் வருந்தாமல் அடுத்த தேர்வில் எழுதி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” எனக் கூறினார்.


 


 



 


 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.