உங்களின் ஏழாம் பாவகம் கெட்டிருந்தால், நீச்சமாக இருந்தால் அல்லது பகை பெற்று இருந்தால்...  மிக கடினமான போராட்டம் உள்ள ஒரு திருமண வாழ்க்கை தான் உங்களுக்கு அமையும்.  அது முதல் திருமணத்தைப் பற்றி மட்டும் சொல்லும்.   உதாரணத்திற்கு மீன லக்னம்  ஏழாம் அதிபதி ’புதன்’  லக்னத்திலேயே நீச்சமடைந்திருக்கிறார் என்று வைத்துக் கொண்டால் நிச்சயமாக அவரால் நிம்மதியாக வாழ முடியாது.  விவாகரத்து ஆகும் என்று நான் கூறவில்லை... ஆனால் நிம்மதியான வாழ்க்கை இருப்பது மிக மிகக் கடினம்.  ஒருவேளை அந்த வாழ்க்கைத் துணை அவரை விட்டுவிட்டு வேறு மாநிலத்திலோ, வேறு நாட்டிற்கோ சென்றுவிட்டால் விவாகரத்து பெறாமல் வாழலாம்.  ஆனால் ஒன்றாக வாழும் பொழுது  பல சங்கடங்களை ஜாதகர் அனுபவித்து ஆக வேண்டும்.  ஒருவேளை மீன லக்கினம் ஏழாம் அதிபதி புதன் நிச்சம் பெற்று லக்னத்தில் அமரும்போது  உடன் சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தால்.  நிச்சயமாக  ஏதோ ஒரு வகையில்  வாழ்க்கையை சமாளித்துக் கொண்டு அப்படியே ஓட்டி விடலாம்  ஆனால் நீச்சபங்க ராஜயோகம் கிடைக்காத பட்சத்தில்  நிச்சயமாக  மனம் முறிவு ஏற்படலாம் சிலருக்கு விவாகரத்து கூட ஆகலாம்.

  இதற்கு பரிகாரம் உண்டா என்று கேட்டால் நிச்சயமாக கிடையாது ஒரு மனிதன் அவர் ஜாதகத்தில் இருப்பதை வாழ்நாளில் அனுபவித்து ஆக வேண்டுமே தவிர  அதற்கு காரணம் தேடவோ அல்லது பரிகாரம் தேடவோ நிச்சயமாக முடியாது. அப்படி எவ்வளவு பணத்தை செலவு செய்து பரிகாரம் செய்தால் கூட  அவை பலிப்பது இல்லை என்பது தான் என்னுடைய அனுபவ கருத்து.     முதல் திருமணம் சரியாக அமையவில்லை இரண்டாவது திருமணம் ஆவது எப்படி இருக்கும் என்று கேட்கிறவர்களுக்கு  அடுத்ததாக என்னுடைய பதில்  உங்கள் ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து எண்ணி பதினோராம் வீட்டை பாருங்கள்.

  11-ம் வீடு:

  ஏழாம் பாவகம் கெட்டிருந்து ஏழாம் அதிபதியும் வலுவிழந்து இருந்தால்  அவருடைய 11 ஆம் பாவத்தை பார்க்க வேண்டும் ஒரு வேலை 11 ஆம் பாவகம் மிக வலிமையாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு இரண்டாம் திருமணம் சாத்தியப்படும்.   அந்த வாழ்க்கை அவருக்கு நன்றாக அமைந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்லும்.  முதல் திருமணம்  வெற்றிகரமாக முடியாதவர்கள் பரிகாரம் செய்து பின்பு திருமணம் செய்வார்கள், அந்த திருமணம் வெற்றிகரமாக அமைந்து விடும் அவர்கள்   நினைப்பது பரிகாரம் செய்ததால் தான் 2வது திருமணம் வெற்றி ஆனது என்று ...  ஆனால்  ஜாதகத்திலேயே இரண்டாம் திருமணத்திற்கான பாவகம் 11 மிக வலிமையாக இருந்ததால் அவருக்கு இப்படிப்பட்ட வாழ்க்கை துணை அமைந்தது என்று கூறலாம்.

  வம்பு வழக்குகளில் திருமணம் :

  பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்த  சில திருமணங்கள்  நீதிமன்றம் வரை சென்று போராடிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு நிச்சயமாக  எவ்வளவு போராடினாலும் விவாகரத்து ஆகியே தீரும்.  ஒருவேளை வாகரத்து ஆனால்  பதினோராம் பாகம் வலிமையாக இருந்தால்... தாராளமாக நீங்கள் வழக்குகளில் போராடாமல்... ஒரு நல்ல ஜோதிடரை அணுகி  ஆக வேண்டிய அடுத்த காரியத்தை பார்க்கலாம்.   இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு முதல் திருமணத்திலேயே வழக்குகள் வரை போய் அவை நின்று நல்லபடியான முதல் திருமணம்  வாழ்க்கை வாழ்ந்தவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஆகையால்  சரியான ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதகத்தின் படி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு பின்பு செயல்படுத்துங்கள் .