தருமபுரி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தருமபுரி மாவட்டம்  பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் பத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் இன்று இந்த குடோனில் நாட்டு வெடிகள் பானம் உள்ளிட்ட பட்டாசு வகைகள் தயாரித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் கூலி தொழிலாளர்கள் பணியை தொடங்கினர். ஆனால் இன்று தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை குடோனில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் எதிர்பாராத விதமாக வெடித்தது. இந்த வெடி விபத்தில் அங்கு வேலை செய்திருந்த பழனியம்மாள்(70) மற்றும் முனியம்மாள்(50) இரண்டு பேரும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த சிவசக்தி என்ற பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த வெடி விபத்தில் பட்டாசு வைக்கப்பட்டிருந்த குடோன் கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இந்த பட்டாசு குடன் ஏற்பட்ட தீயை பென்னாகரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜெசுபாதம் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த விபத்துக்கு குறித்து பாப்பாரப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு குடோன் இருக்கும் ஊழியர்கள் குறைவாகவே பணிக்கு வந்திருந்ததால் பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.