கரூரில் ஓடும் காரில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


 


கரூர் மாநகராட்சியை ஒட்டிய புறநகர் பகுதியான வெண்ணைமலை பசுபதிபாளையத்தை சார்ந்தவர் செந்தில் குமார். முன்னாள் ராணுவ வீரரான இவர், தான் ஒரு மாதத்திற்கு முன்பு பழைய கார் ஒன்றை சென்னையை சார்ந்த தனலட்சுமி என்பவரிடமிருந்து வாங்கி நிலையில் அதில் கரூர் நகருக்கு வந்துள்ளார். பர்சேசை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போது, கார் கோவை சாலையில் கொண்டிருந்த போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வருவதை கண்டு சாலையோரத்தில் நிறுத்தி விட்டு காரில் இருந்த 3 பேரும் கீழே அவசரமாக இறங்கி விட்டனர்.




அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் காரின் முன்பகுதி மட்டும் எரிந்து.




இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக கரூர் - கோவை சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.