வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்கள் முன்பு துவங்கியது. துவங்கிய உடனே தமிழகம் முழுவதும் மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. நிபுணர்கள் கணித்தது போலவே இந்த வருடம் மழை அதிகமாக இருக்கும் என்று ஒரு ஸ்டேட்மெண்டை கூறுவது போல விடாமப் அடித்தது. சென்னையில் காலையில் எழுந்து பார்த்தால் ஊரெல்லாம் வெள்ளக் காடாக இருக்கும் என்று பார்த்தால், அதுதான் ஏமாற்றம். பல இடங்களில் தன்னேற்ற தேங்கவில்லை என்று பரவலாகக் கூறப்பட்டது. ஒரு சில இடங்களில் தேங்கி இருந்தாலும் கடந்த வருடம் போல இல்லை என்பதை சென்னை வாழ் மக்களே ஒத்துக்கொள்கிறார்கள். அதே நேரத்தில் விடாமல் பெய்த கனமழை இன்று தான் கொஞ்சம் குறைந்துள்ளது. காலை முதல் பலமாக பெய்து வந்த மழை மதியத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறையத்துவங்கி உள்ளது. இன்று நேற்றைப்போல மழை இருக்காது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஏற்கனவே தெரிவித்திருந்தார். 



மழை அளவு


இதுகுறித்து அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், "திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை அதாவது 36 மணி நேரத்தில் வடசென்னை பகுதியில் 300 மி.மீ. மழை பெய்துள்ளது. தென் சென்னையில் சராசரியாக 150 மி.மீ மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 167 மி.மீ மழை பெய்துள்ளது. பெரம்பூர், ராயபுரம், கொளத்தூர், மணலி, கத்திவாக்கம், திருவொற்றியூர், ஆகிய இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. மத்திய சென்னையில் தி.நகர், ஆழ்வார்பேட்டை, மைலாப்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் 36 மணி நேரத்தில் 150 முதல் 200 மி.மீ. மழை பெய்துள்ளது. தென் சென்னையில் அடையாறு, கிண்டி, பெருங்குடி, பாலவாக்கம் ஆகிய பகுதிகளில் 36 மணி நேரத்தில் 100- 150 மி.மீ. மழை பெய்துள்ளது", என்றார்.


தொடர்புடைய செய்திகள்: IPL 2023 Auction : சூடுபிடிக்கும் ஐ.பி.எல். 2023 ஏலம்..! எப்போ நடக்கிறது..? எங்கு நடக்கிறது..? முழு விவரம் உள்ளே..!


நாளை லீவ் இல்லை


இன்றைய மழை நிலவரம் குறித்து காலையில் அவர் கூறியது, "இன்று தென் கிழக்கு சென்னையில் மேக கூட்டங்கள் குழுமியுள்ளன. ஆனால் நேற்று பெய்தது போல் இன்றும் மழை இருக்காது, ஆனால் ஓரளவுக்கு மழை இருக்கும். 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளில் பெய்த மழையின் அளவை ஒப்பிட்டு பார்க்கையில் இந்த ஆண்டு முதல் நாளே அதிக அளவிலான மழை பெய்துள்ளது. அதிலும் 36 மணி நேரத்தில் வடசென்னையில் 300 மி.மீ. என்பதெல்லாம் மிகவும் அதிகம்", என்று பிரதீப் ஜான் தனது பதிவில் தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே இன்று மழை நேற்றைப் போல பெரிதாக இல்லை. இந்த நிலையில் அவர் நாளைய மழை நிலவரத்தை ஒரே டீவீட்டில் ஷார்ட்டாக சொல்லிவிட்டார்.






தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை


தொடர்ந்து இரண்டு நாட்களாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு நாளையும் விடுமுறை கிடைக்க வாய்ப்பில்லை என்று வெளிப்படையாக கூறிவிட்டார். அவரது ட்விட்டர்ப் பதிவில், "நாளைய தினம் விடுமுறைக்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு, ஹாட்ரிக் லீவ் எதிர்பார்க்க வேண்டாம் குழந்தைகளே… ஹோம்வொர்க்கெல்லாம் முடித்து ரெடியாக இருங்கள்", என்று எழுதியிருந்தார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. நேற்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தமிழ் நாடு வெதர்மேன் நாளைக்கு மழைக்கு பெரிதாக வாய்ப்பில்லை என்றும் பள்ளி மாணவர்கள் விடுமுறையை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.