தமிழ்நாடு முழுவதும் நாளை வழக்கம்போல் இயங்கும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சருடன் தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பு நடந்த பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 


முன்னதாக, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டதை தொடர்ந்து தனியார் பள்ளிகள் ஸ்டிரைக்கில் ஈடுப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 91% பள்ளிகள் இன்று வழக்கம்போல் இயங்கிய நிலையில் மீதமுள்ள 9% பள்ளிகள் ஸ்டிரைக்கில் ஈடுப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 






இன்று இயங்கிய, இயங்காத பள்ளிகளின் விவரம் 


தமிழகத்தில் மொத்தமுள்ள 11,335 தனியார் பள்ளிகளில் 10,348 பள்ளிகள் வழக்கம் போல இயங்கின. 38 மாவட்டங்களில் உள்ள 987 தனியார் பள்ளிகள் இயங்க வில்லை. இந்த விவரத்தின் படி கிட்டத்தட்ட 91 சதவீத பள்ளிகள் வழக்கம் போல இயங்கி உள்ளன.


குறிப்பாக காஞ்சிபுரம், நாமக்கல், சிவகங்கை ,விழுப்புரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், திருநெல்வேலி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் 100 சதவீதம் பள்ளிகள் இயங்கி உள்ளன. தர்மபுரியில் உள்ள 190 பள்ளிகளில் 31 பள்ளிகள் மட்டுமே இயங்கி உள்ளன. 


நாமக்கல்லில் 216 பள்ளிகளில்  70 பள்ளிகள் மட்டுமே இயங்கி உள்ளன. கலவரம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 167 பள்ளிகளில்  153 பள்ளிகள் இயங்கி உள்ளன. சென்னையில் 689 பள்ளிகளில் 684 பள்ளிகள் இயங்கி உள்ளன. இந்த நிலையில் தற்போது தனியார் பள்ளிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக, கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு ஒரு தற்கொலை என பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட நிலையில், இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப்போராட்டம் நேற்று கலவரமாக வெடித்தது. பள்ளியின் உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர். 


கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் இன்று முதல் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயங்காது என்றும் பள்ளிக்கு நஷ்டஈடு தருவதோடு, தனியார் பள்ளிகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண