சென்னையில் பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்தி  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  எலக்ட்ரிக் வாகன பேரணியை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆஸ்திரேலிய அமைச்சர் ரோஜர் குக்  ஆகியோர் தொடங்கி வைத்தனர். 


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில்  M Auto Electric Mobility நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜர் குக் மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் பலர் வருகை தந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்தி  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  எலக்ட்ரிக் வாகன பேரணியை  தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,ஆஸ்திரேலிய  நாட்டு  சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜர் குக்  ஆகியோர் கொடியசைத்து தொடங்கி  வைத்தனர்.  




 பின்னர் தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதி முதல் அமீர் மஹால் வரை  அமைச்சர் மனோ தங்கராஜ்,ஆஸ்திரேலிய  நாட்டு  சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜர் குக், M Auto எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனர் யாஸ்மின் ஜவஹர் அலி ஆகியோர் இணைந்து ஆஸ்திரேலிய பிரதிநிதிகளுடன் ராயப்பேட்டையில் உள்ள அமீர் மகாலுக்கு எலக்ட்ரிக் வாகனத்தில் பயணம் செய்தனர். தாஜ் கோரமண்டல்  நட்சத்திர விடுதி முதல் அமீர் மஹால் வரையிலான ஐந்து கிலோமீட்டர் பயணத்தை அவர்கள்  25 எலக்ட்ரிக் வாகனத்தில் மேற்கொண்டனர்.


இவர்களுக்கு ஆற்காடு இளவரசர் முகமது ஆசிப் அலி இரவு விருந்து அளித்தார்.  இந்நிகழ்ச்சியில் அமைச்சர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியானது இந்தியாவில் மேற்கு ஆஸ்திரேலியாவின் தொழில்துறை தொடர்புகளை வலுப்படுத்துவதை  நோக்கமாகவும், இந்திய சந்தையில் மேற்கு ஆஸ்திரேலியாவின் வணிக வாய்ப்புகளை ஈர்க்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


மேலும் இந்தப் பாரம்பரிய சுற்றுலா பயணத்தை  எலெக்ட்ரிக் வாகனத்தில்  ஏற்பாடு செய்ததன் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் தூய்மையான, நிலையான போக்குவரத்து மாற்றங்களின் அவசியத்தையும் வலிறுத்துவதாக அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வாகன போக்குவரத்தின் போது சுற்றுச்சூழல்  மாசு படுவதில் இருந்து விடுபடும் நோக்கமாகவும்,   பசுமை மறுசுழற்சி ஆற்றலைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தும் விதமாகவும் இந்தப் பயணம்  அமைந்ததாக தெரிவித்தார். 


அதேபோல்  பசுமை ஆற்றலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக இந்த பயணம் அமைவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண