அமராவதி அணையின்  தண்ணீர் வரத்து நிலவரம்


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 6000 கன அடி தண்ணீர் வரை ஆற்றில் திறக்கப்பட்டது. இந்நிலையில் மழை குறைவால் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது. இந்நிலையில், அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 640 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் மாவட்டம் செட்டிபாளையம் அணைக்கு காலை நிலவரப்படி அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு, 350 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு 313 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்கால்களையும் 440 கன அடி தண்ணீரும், திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 80.88 அடியாக உள்ளது.  


கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து நிலவரம்     


கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு காலை நிலவரப்படி வினாடிக்கு 12 ஆயிரத்து 954 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், டெல்டா பாசன பகுதிகளில் சாகுபடிக்காக காவேரி ஆற்றில் இருந்து 11,434 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்கால்களில் 1520 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.





 


நங்காஞ்சி அணையின் தண்ணீர் வரத்து நிலவரம்


திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதியில் மழை வரத்து ஏதும் இல்லாத நிலையில், காலை நிலவரப்படி வினாடிக்கு, 40 அடி கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் 39.37 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 33.76 கனஅடியாக உள்ளது. மழை குறைவால் நங்காஞ்சி அணைக்கு தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது.


கரூர் ஆத்துப்பாளையம் அணையின் தற்போதைய நீர் நிலவரம்


கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை நிலவரப்படி 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், தற்போது 23.94 அடியாக உள்ளது. அணையில் இருந்து நொய்யல் ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழை குறைவால் ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது.


மூன்று மாதங்கள் பருவமழை உள்ளது


காவிரி, அமராவதி ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கெடுத்து நடப்பாண்டில் இதுவரை 200 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. இன்னும் சுமார் மூன்று மாதங்கள் பருவமழை பெய்ய இருப்பதால், இன்னும் ஏராளமான உபரி மழையின் நீர் கடலில் வீணாக கலக்கும். இதை முறையாக வறட்சி பகுதியில் பயன்படுத்தினால், நூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள் நிரம்பும் இலட்சக்கணக்கான நிலங்கள் பாசனம் பெறும். கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். நாட்டின் பொருளாதாரம் மேம்படும். இதனை ஒன்றிய மாநில அரசுகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.


 


 




 


கரூர் மாவட்டத்தில் மழை நிலவரம்


கரூர் மாவட்டத்தில் மழை பல்வேறு இடங்களில் பெய்யவில்லை. ஆனால், மாயனூரில் ஒரு மில்லி மீட்டர் மழையும், குளித்தலையில் இரண்டு மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. கரூர் மாவட்டத்தில் மழை ஏதும் பெய்யாததால் விவசாயிகள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.