விழுப்புரம்: ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் சுய தொழில் புரிந்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குவதற்கான நேர்காணல் வழக்கமாக  விழுப்புரத்தில் தாட்கோ மாவட்ட அலுவலகத்தில் நடைபெறும். கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்ட தாட்கோ அலுவலர் இளைஞர் ஒருவரை நேர்காணல்போது அநாகரிகமாக பேசினார். இந்த நிலையில் ஏபிபி நாடு செய்தி வெளியிட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் 140 நபர்களுக்கு தாட்கோ நேர்காணல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.


"மேய்க்கிறது மாடு.. டிகிரிலாம் வச்சிருக்கியா நீ" பட்டதாரி இளைஞரை திட்டிய தாட்கோ மாவட்ட அலுவலர்


விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் சார்பில், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் சுய தொழில் புரிந்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குவதற்கான நேர்காணல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி,  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,


தமிழ்நாடு முதல்வர் அவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பொருளாதார மேம்பாட்டிற்காகவும், சுயதொழில் புரிவதற்கான வங்கிக் கடன், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டம், நிலம் மேம்பாட்டுத் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழு கடன் திட்டம் போன்ற திட்டங்கள் மூலமாக கடனுதவிகளை வழங்கிட உத்தரவிட்டிருந்தார்கள். அதனடிப்படையில், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் சுயதொழில் புரிந்திட ஏதுவாக, மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கிடும் பொருட்டு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழக இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு முதுநிலை வரிசை அடிப்படையில் நேர்காணல் நடத்தப்பட்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.


அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம், 140 நபர்கள் சுய தொழில் புரிவதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வேண்டி விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. இந்நேர்காணலில், விண்ணப்பதாரரின் முழு விபரம், தொழில் அனுபவம், சான்றிதழ் போன்றவை சரிபார்க்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி,  அவர்கள் தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தில், தாட்கோ மாவட்ட மேலாளர் மணிமேகலை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண