தமிழ்நாடு மின்சாரத் துறை முன்னாள் அமைச்சர் பி,தங்கமணி(Thangamani), தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மூலமும், 2016 முதல் 2020 வரையிலானபணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளது சம்மந்தமாக நேற்று நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் சுண்காணிப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, வழக்கு தொடர்பாக பி.தங்கமணி(Thangamani) மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவரது முன்னாள் அரசியல் தேர்முக உதவியாளர் மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் 69 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினர் அதிரடி சோதனை(Raid) நடத்தி வருகின்றனர்.
13(2) r/w 13(1)(e) of the Prevention of Corruption Act 1988 and uls 13(2) thw 13(1)(b) of the Prevention of Corruption Act 1968 as amendod in 2018 -ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையை நடத்தி வருகின்றனர்.இந்த சட்டப்பிரிவுகளின் கீழ், அரசுப் பணியாளர் (அமைச்சர் உட்பட) என்ற முறையில் தன் நிரவாகத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்ட பொது சொத்தை எதனையும், நேர்மையற்ற முறையுலோ அல்லது மோசடியாகவோ கையாடல் செய்வாராயின், அல்லது பிறவாறு தனது சொந்த பயனுக்காக மாற்றிக் கொள்வாராயின், அல்லது பிறர் அவ்வாறு செய்ய அனுமதிப்பாராயின், ஒராண்டு முதல் ஏழாண்டு வரை சிறைத்தண்டனை விதித்துத் தண்டிக்கப்படுவார்.
குற்றச்சாட்டு என்ன?
1. 23-05-2016 அன்று, தங்கமணி மற்றும் அவரின் குடும்பத்தினரின் மொத்த சொத்து மதிப்பு 1 கோடியாக இருந்தது (தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், இதர சொத்துக்கள் மதிப்பு - 1,01,86,017)
2. 31- 03- 2020 அன்று, தங்கமணி மற்றும் அவரின் குடும்பத்தினரின் மொத்த சொத்து மதிப்பு 8 கோடியாக அதிகரித்து காணப்பட்டது (8,47,66,318)
3. 23.05.2016 முதல் 31.03.2020 வரையிலான காலத்தில், சட்டப்பூர்வமாக பெறப்பட்ட வருமானம் 5 கோடியாக உள்ளது (தொழில் வருவாவ், வங்கிக் கடன், முதலீட்டு சொத்து - 5,24,86,617).
4. அதே காலத்தில் ஏற்பட்ட செலவீனங்கள் மட்டும் 2 கோடியாக உள்ளது. (2,64,78,335)
5. 2016-20 வரையிலான பணிக்காலத்தில், வழக்கின் முதல் குற்றவாளியான பி.தங்கமணி, இரண்டாவது குற்றவாளியான அவரின் மகன், மூன்றாவது குற்றவாளியான அவரின் மனைவி மூலம் 7 கோடி மதிப்பிலான சொத்து பெறப்பட்டுள்ளது.
6. ஆனால், அதே காலத்தில் இந்த மூவரின் சேமிப்புத் தொகை 2 கோடியாக மட்டுமே உள்ளது (2,60.08,282) - அதாவது, (3-4)
எனவே, 2016-20 வரையிலான பணிக்காலத்தில், பொது நிதியை தவறாகப் பயன்படுத்தி, ரூ.4 கோடி (4,85,72,019) வரை வருமானத்திற்கு கூடுதலான வகையில் சொத்து சேர்த்துள்ளதாக மதிப்படப்படுகிறது.
மேலும், கிரிப்டோ கரன்சியில் தங்கமணி, அவரது மகன் பெருமளவில் முதலீடு செய்துள்ளதாகவும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்