ஈரோடு மாவட்டங்களில் நாளை மறுநாள் வியாழக்கிழமை (14.08.2025) மின்வாரியம் சார்பில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

Continues below advertisement

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள்
தமிழ்நாட்டில் மின்வாரியம் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதற்காக, குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு நாள் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்படும். பொதுவாக, மின்தடை விவரம் முன்கூட்டியே அறிவிக்கப்படும்.

எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?
பராமரிப்பு பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த நேரத்தில், சிறிய பழுதுகளை சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

Continues below advertisement

நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

சிவகிரி:

சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மூலப்பாளையம்

கணபதிபாளையம்

ஈச்சம்பள்ளி, முத்துகோவுடன்பாளையம், சொலங்கபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கப்பாத்திபாளையம், பச்சம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கயம்பாளையம், சாணார்பிளயம் மற்றும் குமாரப்பாளையம்

நடுப்பாளையம்

நடுப்பாளையம், தாமரைபாளையம், மலையம்பாளையம், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், கொளநல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளட்டாம்பரப்பூர், பி.கே.பாளையம், சொலங்கபாளையம், எம்.கே.புதூர், ஆரப்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம்.

பொது மக்கள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.