இன்னும் ஐந்து மாதங்களில் மகளிர் உரிமைத் தொகை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பார் என்று தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


ஈரோடு சூரம்பட்டியில், காங்கிரஸ் வேட்பாளார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். 


ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த வாரம் திங்கள் கிழமை (வரும் 27-ஆம் தேதி) நடைபெறுகிறது.  தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.


இன்று (21,பிப்ரவரி, 2023) சூரம்பட்டியில் பரப்புரை மேற்கொள்ளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதன் விவரம்: 


”அ.தி.மு.க. வேட்பாளர், அவர் செல்லும் இடமெல்லாம் அவரை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அவரை துரத்தி அடிக்கின்றனர். அவர் என்ன பிரச்சாரம் செய்கிறார். மீசை இருக்கா? என்று கேள்வி எழுப்புகிறார். ஏன், ஷேவ் பண்ணி விடுவார் போலிருக்கிறது. வேஷ்டி கட்டுறீங்களா என்று கேட்கிறார். அவருக்கு பெரிய மீசை இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அந்த மீசை என்ன செய்திருக்கிறது.


2027- ஆம் ஆண்டு இந்திய வராலாற்றிலேயே தமிழ்நாடு அரசின் தலைமை செயல்கத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. முதல்முறை இது. அப்போது அவர் மீசை என்ன செய்துகொண்டிருந்தது? தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது மீசை என்ன செய்துகொண்டிருந்தது? எனக்குத் தெரியாது என்று பதில் சொன்னீர்களே?


ஜெயலலிதா இறந்த பிறகு, கொட நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்ததே அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? மீசை என்ன செய்தது?  


மூன்றரை ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். மக்கள் அவரை தேர்ந்தெடுத்தார்களா? நீங்கள் தேர்ந்தெடுத்தீர்களா? 
அதிமுக-விற்கு வேட்பாளருக்கு மக்களிடம் ஆதரவு இல்லை.
5 லட்சம் கோடி கடன் இருக்கு.


தமிழ்நாடு மாநில உரிமைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு பறித்தபோது உங்க மீசை என்ன செய்தது? 


உங்க மீசை ஒன்றை மட்டும் தான் செய்திருக்கிறது. இரண்டு பெண்மணிகளின் ஷூவிற்கு பாலிஷ் போட்டது மட்டும்தான்.  இன்னும் சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகி விடுவார். ஓ. பன்னீர்செல்வம் எதாவொரு மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்படுவார். 


எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சரானார் என்பதை மறந்துவிடாதீர்கள். இவர் மீசையைப் பற்றி பேசுகிறார். கொரோனா காலத்தில் 50 கோடி கடன் மட்டும்தான் கிடைத்தது.


கொரோனா தொற்றின் முதல் அலையின் போது, பிரதமர் மோடி என்ன சொன்னார்? - கைகள் தட்டுங்கள்,  விளக்கு ஏற்றுங்கள். இதை எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செலவம் செய்தார்ககள்.ஆனால், தொற்றை ஒழிக்க என்ன செய்தார்கள். அ.தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க.-வைச் சேர்ந்தவர்கள் ஆளுநர், பிரதமர் ஆகியோரை சந்திப்பது எதற்கு? உள் கட்சி பிரச்சனைகளை பற்றி பேசுவதற்காகதானே! தமிழ்நாட்டில் ஆளுநர் கையெழுத்திடாமல் நிலுவையில் உள்ள திட்டங்களை பற்றி பேசியிருக்கலாம்தானே? 



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : 


ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.


இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக தென்னரசு போட்டியிடுகிறார். இவர்கள் மட்டுமில்லாமல் நாம் தமிழர், தேமுதிக கட்சியும் களத்தில் உள்ளது. இந்தநிலையில் அதிமுக மற்றும் திமுக இரண்டு பேரும் இந்த தொகுதியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் நெருங்கும் நிலையில், இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு என்ற ரீதியில் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது.