Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் முதல் முறையாக வாக்களிப்பவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இதில், காலை 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குப்பதிவாகி இருந்தது.11 மணி நிலவரப்படி 27.89% வாக்குப்பதிவானது.
நண்பகல் 1 மணி நிலவரப்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதியம் 1 மணிவரை 44.56% வாக்கு பதிவாகியுள்ளது.
மதியம் 3 மணி நிலவரப்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 59.28% % வாக்கு பதிவாகியுள்ளது.