தமிழ்நாடு:



  • ஊராட்சி மணி திட்டத்திற்கான  அழைப்பு மையத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - கிராமப்புற மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்ப்பதை உறுதி செய்ய நடவடிக்கை

  • பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது அதிமுக - அண்ணாமலையின் உள்நோக்கம்  கொண்ட பேச்சே கூட்டணி முறிவுக்கு காரணம் என விளக்கம்

  • கூட்டணியிலிருந்து அதிமுக விலகியது குறித்து பாஜக தேசிய தலைமை பேசும் - மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்

  • அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பது சந்தேகத்திற்கிடமானது என திமுக கூட்டணி தலைவர்கள் விமர்சனம்: அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி சேர அதிக வாய்ப்புள்ளதாக கருத்து

  • போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுடன்  அமைச்சர் த.மோ. அன்பரசன் இன்று பேச்சுவார்த்தை - உடன்பாடு எட்டப்பட்டால், மின் கட்டணம் மாற்றியமைக்கப்படும் என தகவல்

  •  1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு நீட்டிப்பு - செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 8ம் தேதி வரை விடுமுறை அற்வித்தது பள்ளிக்கல்வித்துறை

  • தொடர்மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடக்கப்பளிக்களுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவிப்பு

  • தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தொழில்துறை ஆணையராக  நிர்மல்ராஜ் நியமனம்


இந்தியா:



  • செல்வந்தர்களாக பிறந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏழைகளின் வாழ்க்கை ஒரு பொருட்டல்ல - மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

  • ஆதார் அடையாள அட்டை நம்பகத்தன்மை அற்றது என்ற மூடிஸ் நிறுவனத்தின் கருத்துக்கு மறுப்பு - உலகின் மிகவும் நம்பகமான அடையாள அட்டை என மத்திய அரசு விளக்கம்

  • ராஜ்நாத் சிங் முன்னிலையில் ச்-295 ரக விமானம் இந்திய விமானப்படையில் சேர்ப்பு

  • தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் வழங்கும் விவகாரம் - பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

  • கூடுதல் வட்டி கேட்டு பட்டியிலனப் பெண்ணின் ஆடை கிழிப்பு - அடித்து துன்புறுத்தியதற்கு குவியும் கண்டனங்கள்

  • திருப்பதி கோயிலில் பாயும் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார் மலையப்ப சுவாமி - சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் இன்று நிறைவு பெறுகிறது பிரமோற்சவம்

  • பரபரப்பான சூழலில் இன்று டெல்லியில் கூடுகிறது காவிரி ஒழுங்காற்றுக்  குழு கூட்டம் - கூடுதலாக நீர் திறக்கக் வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை குறித்து ஆலோசனை

  • ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமின் மனு அமராவதி நீதிமன்றத்தில் இன்று விசாரணை - காவலில் எடுத்து விசாரிக்கக் கோரும் சி.ஐ.டியின் மனுவும் விசாரணை


உலகம்:



  • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அடியாலா சிறைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு

  • ஆஸ்திரேலியாவில் ரூ.533 கோடி செலவில் அமைய உள்ள ஹைட்ரஜன் மையம்

  • நைஜரில் உள்ள 1500 ராணுவ வீரர்கள் வெள்யேற்றம் - பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு

  • கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்துக்களை மிரட்டுவதாக குற்றச்சாட்டு - கோயில்களை சிதைப்பதாகவும் தகவல்


விளையாட்டு:



  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று ஒரே நாளில் 2 தங்கம் வென்றது இந்தியா - 3வது நாள் முடிவில் 11 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 11வது இடம் வகிக்கிறது

  • இந்தியாவில் நடைபெறும் உலக்கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது