Rain update: காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் தொடங்கவிருந்த நிலையில் தொடர் கன மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு விடுமுறை அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பரவாலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக கன மழையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.
அதேபோல், ராமநாத புரம் மாவட்டத்தில் மழை பெய்யும் இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.