ADSP VELLADURAI SUSPENSION: என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளதுரை பணியிடை நீக்கம்:
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை பணியில் இருந்து இன்று ஓய்வு பெற இருந்த நிலையில், ஒருநாளைக்கு முன்னதாக நேற்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2004ல் வனக் கொள்ளையர் வீரப்பனை சுட்டுக் கொன்றதாகக் கருதப்படும் காவல்துறை அதிகாரியான வெள்ளதுரை, அயோத்திக்குப்பம் வீரமணியை மெரினாவில் என்கவுண்டரில் கொன்றதன் மூலம் கவனம் பெற்றார். வீரப்பனை தேடும் சிறப்பு அதிரடிப்படையில் இவர் இடம்பெற்று இருந்தார். உதவி காவல் ஆய்வாளராக பணியைத் தொடங்கிய இவர், கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (AdSP) உயர்ந்துள்ளார். 2021 மே 7 ஆம் தேதி திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களை அச்சுறுத்தும் கும்பல்களைக் கண்காணிக்க வெள்ளதுரை டெப்டடேஷனில் நியமிக்கப்பட்டார். திருவண்னாமலையில் மாவ்ட்ட குற்றவியல் ஆவண காப்பாக ஏடிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தார். அவரது பணிக்காலம் முடிவடையவிருந்த நிலையில், மாநில டிஜிபி மற்றும் போலீஸ் படைத் தலைவர் (ஹோபிஎஃப்) சங்கர் ஜிவால் அமைதியான முறையில் ஓய்வு பெற பரிந்துரைத்து இருந்தார். ஆனால், மாநில உள்துறை வெள்ளதுரையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
பணியிடை நீக்கத்திற்கான காரணம் என்ன?
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தியில் ஜூன் 6, 2013 அன்று புகாரளிக்கப்பட்ட, ராமு என்கிற (26) என்கிற குமார் என்ற கொக்கி குமார் என்பவர், போலீஸ் காவலில் இருந்தபோது மரணமடந்த வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாக இந்த இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குமாரின் வழக்கு சிபி-சிஐடி விசாரணைக்கு அனுப்பப்பட்டது மற்றும் காவல் ஆய்வாளர் எஸ் கீதா தனது இறுதி அறிக்கையை 2023 ஆம் ஆண்டில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
வழக்கு விவரம்:
ஆவரங்காடு ரயில் நிலையம் அருகே உள்ள திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் இருந்து குமார் 500 ரூபாயை கொள்ளையடித்ததாக போலீஸார் தெரிவித்தனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துரை சிங்கம் தலைமையில் போலீசார் சென்று குமாரை கைது செய்தனர். போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். அப்போது ஏற்பட்ட கைகலப்பில், குழியில் விழுந்து, கால்களிலும், உடலிலும் காயம் ஏற்பட்டது. பின்னர், மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக கடந்த ஜனவரி 5, 2012 அன்று நடைபெற்ற பாண்டியர் குரு பூஜை விழா காளையார் கோயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த திருப்பாசேதி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ஆல்வின் சுதன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பான காவல்துறை நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்ட புதுக்குளத்தைச் சேர்ந்த எம்.பிரபு மற்றும் பாரதி ஆகியோரின் நெருங்கிய கூட்டாளி தான் குமார் ஆவார். அந்த நேரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் டிஎஸ்பி ஆக இருந்த, வெள்ளதுரையின் உத்தரவின் பேரில் தான் குமார் அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.
இதனிடையே, ஜூலை 23, 2003 அன்று அயோத்திக்குப்பம் வீரமணியை வெள்ளதுரை கொன்றபோது, மெரினா காவல் நிலைய முன்னாள் காவல் ஆய்வாளர் லாயிட் சந்திராவிடமும் உள்துறை விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.