முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் நாகசாமி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 92. பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் முதல் இயக்குநர் என்ற பெருமைக்குரியவர் நாகசாமி. நாகசாமியின் பணியை பாராட்டி கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க: CM Stalin Writes to PM Modi: அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் திருத்தம் செய்யும் முடிவினை கைவிடுக - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்




 


நாகசாமி தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்து குறிப்பு அறிஞராக அறியப்பட்டார். கடந்த 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி பிறந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் மற்றும் மொழியியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தார். அதன்பிறகு, புனே பல்கலைக்கழகத்தில் இந்திய கலைகள் மற்றும் தொல்லியல் தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார். இந்திய தொல்லியல் ஆய்வகத்தில், தொல்லியல் துறையில் பயிற்சி எடுத்தவர் நாகசாமி. 1959 முதல் 1963ஆம் ஆண்டு வரை சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக பணியில் சேர்ந்தார். 1963ஆம் ஆண்டு முதல் 1966ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாக பணியாற்றினார். அதன்பின்னர், 1966ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க: Emerging Women Cricketer 2021: 2021 ஐசிசியின் வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை - பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் தேர்வு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண