தமிழ்நாட்டின் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் செந்தில் பாலாஜி. அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக பொறுப்பு வகித்த அவர், தி.மு.க.வில் இணைந்த பிறகும் முக்கிய நிர்வாகியாக தி.மு.க.வில் வலம் வருகிறார். 


 




 


இந்த நிலையில் கரூர் மாவட்ட திமுக செயலாளராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள, தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 21-ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். கோவை மாவட்ட தி.மு.க.வின் பொறுப்பாளராக உள்ள செந்தில் பாலாஜிக்கு அவரது விசுவாசிகள் "மின்சார கண்ணா" என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டி பரபரப்பை கிளப்பினர். 


 




இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் சொந்த தொகுதியான கரூரில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரமான ராஜராஜ சோழன் என்று அழைக்கப்படும் அருண்மொழிவர்மன் வேடத்தில் செந்தில் பாலாஜியின் புகைப்படத்தை சித்தரித்து "சாதனை செல்வர்" என்ற வாசகத்துடன் ஒட்டி உள்ள போஸ்டர் தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது. குறிப்பாக கையில் இருக்கும் வேல் கம்பில் சோழ நாட்டின் கொடிக்கு பதிலாக தி.மு.க.வின் கொடி பறக்கிறது.


 


 




கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தீபாவளி பரிசு வழங்கி அசத்திய மின்சார துறை அமைச்சர்.



தீபாவளி என்றாலே புதுவிதமான பட்டாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடி வரும் நிலையில் "திமுக தீபாவளி" என இந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் இலவச வேட்டி, சேலை வழங்கி தீபாவளியை கொண்டாடி உள்ள தமிழக மின்சாரதுறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாரபட்சம் இன்றி வேட்டி சேலை உள்ளிட்ட பொருட்களை இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாட்களே அனைத்து பொதுமக்கள் வீட்டிலும் கிடைக்கும் விதமாக அமைச்சர் உத்தரவு அதன் நிர்வாகிகள் விறுவிறுப்பாக வேலையை செய்துள்ளனர்.


கடந்த தீபாவளிகளில் அவர் கட்சியை சார்ந்த நிர்வாகிகளுக்கு தீபாவளி புத்தாடைகள் இனிப்புகள் வழங்கி வந்த நிலையில் இந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இலவச வேட்டி, சேலையை வழங்கி பொதுமக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளார்.