ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட விஷம்..! நண்பனிடம் சொல்லிவிட்டு தற்கொலை செய்த கல்லூரி மாணவன்..!

சென்னை அடுத்த பிரபல தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அடுத்த பொத்தேரியில் பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட , ஜோசப் ஜேம்ஸ் என்பவரின் மகன் நிகில் பி டெக் ஏரோ பேஸ், ( AEROSPACE) இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர்களுடைய குடும்பம் கேரளாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் மும்பையில் குடியேறி நீண்ட காலமாக வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகில் பொத்தேரியில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்.

Continues below advertisement


இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் அவ தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் அறையில் ஏற்கனவே ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்று வைத்திருந்த சோடியம் சல்பேட் என்ற விஷத்தன்மை உடைய பொருளை, தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். சிறிது நேரம் கழித்து அதே அபார்ட்மெண்டில் மற்றொரு அறையில் வசித்து வரும், தனது நண்பரான குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஆதித்யா சவுத்ரி  என்பவருக்கு போன் செய்து தான் விஷம் குடித்து விட்டதாக தகவல் அளித்ததாக தெரிகிறது.


இதனை அடுத்து ஆதித்யா சவுத்ரி உடனடியாக அவருடைய பிளாட்டிற்கு சென்று பார்த்த பொழுது நிகில் பாதி மயக்க நிலையில் கட்டிலில் இருந்துள்ளார். ஆதித்யா மூலம் நிகில் தனது பெற்றோருக்கு போன் செய்து நடந்த விவரத்தை சொன்னவுடன் அப்பொழுது ஆதித்யா சோடா உப்பு கலந்து நிகிலுக்கு அளித்துள்ளார். அதன் பிறகு அறையில் இருந்த மற்ற இரு நண்பர்களுடன் சேர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் பொத்தேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.


அதன் பிறகு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் போது சிறிது நேரத்திலேயே நிகில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவனின் உடல் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பையில் உள்ள மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உள்ளது. இதுகுறித்து மறைமலைநக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

Continues below advertisement
Sponsored Links by Taboola