நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள முட்டை கொள்முதல் குறைந்து வருவதால் நாளுக்கு நாள் முட்டை விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் முட்டையின் மொத்த கொள்முதல் இடமாக உள்ள நாமக்கல்லில் இருந்து கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் 3 ரூபாய் 60 காசுகள் விற்கப்பட்ட முட்டையின் விலை இன்று முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 15 காசுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள விலை நிலவரப்படி கடந்த 9 ஆம் தேதி நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 3 ரூபாய் 60 காசுகளுக்கு விற்கப்பட்டது. அதன்பின் 10, 12, 14, 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் தினசரி தலம் 5 காசுகள் உயர்ந்த நிலையில், அதன் பின் 21 ஆம் தேதிக்கு பின் 10 காசுகள் விலை உயரத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 10 காசுகளும் விலை உயர்ந்த 3 ரூபாய் 95 காசுகள் இருந்தது. நேற்று நாமக்கல் மண்டலம் முட்டை மொத்த கொள்முதல் விலை நான்கு ரூபாயைக் கடந்து 4 ரூபாய் 5 காசுகளுக்கு விற்கப்பட்டது. இன்று முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 15 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் முட்டை ஏற்றுமதி செய்யப்படுவதால் முட்டை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதிய முட்டைகள் இல்லாத காரணத்தினால் முட்டையின் விலை நாள்தோறும் உயர்ந்து வருவதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. இந்த நிலை நீடித்தால் முட்டையின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார்.