கல்விக்கடன் வழங்கும் முகாமில் 144 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.11.04 கோடி மதிப்பீட்டில் கல்வி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல்  வழங்கி கல்வி கடனை பெற்ற மாணவர்கள் முறையாக அதை பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற்று உங்கள் பெற்றோர்களின் சுமையும் வலியையும் குறைக்க முன்வர வேண்டும் என தெரிவித்தார்.




கரூர் மாவட்டம், தளவாபாளையம், தனியார் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி, அனைத்து வங்கிகள் சார்பாக நடைபெற்ற கல்வி கடன் வழங்கும் முகாமில் 144 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.11.04 கோடி மதிப்பீட்டில் கல்வி கடன் உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா முன்னிலை வகித்தார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், சிறப்பு வாய்ந்த கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற்றுக் கொண்டு உள்ளது. இம்முகாமில் கல்வி கடன் பெற விண்ணப்பித்த மாணவர்களுக்கு கல்வி கடன் உதவி வழங்கும் இனிய நிகழ்வில்,  இங்கு உள்ள மாணவர்கள் அனைவரும் பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களாக உள்ளதால் வரலாறு மற்றும் பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவை தயவு செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.


 


 




 


நீங்கள் சிறுவயதில் துவக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை படிக்கும் போது ஏதாவது ஒரு வகையில் உங்கள் பெற்றோர்கள் கடன் வாங்கி உங்களை படிக்க வைத்திருப்பார்கள். ஆனால் வங்கிகளே உங்களுக்கு கல்வி கடன் உதவி அளிக்கிறது இந்த கல்விக் கடனுதவியினை பெற்று உங்கள் படிப்பை முடித்த பின்பு ஒரு மிகச்சிறந்த அலுவலர்களாகவோ அல்லது ஒரு சிறந்த தொழில் முனைவராகவோ உருவாகும் போது அதன் பெருமைகள் அனைத்தும் உங்களையே சாரும் பெற்றோர்களை சார்ந்து இருந்த நீங்கள் தனித்து இயங்குவதற்கான சூழ்நிலை தன்னமிக்கை உங்களுக்கு உருவாகும்.  ஃபான் கார்டு என்று சொல்வார்கள் அதை பார்த்து நீங்கள் பயந்து விடக்கூடாது வருமான வரி துறையுடன் இணைந்து உங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வருமான வரியை அரசாங்கத்திற்கு கட்ட வேண்டும் அப்போதுதான் அரசாங்கம் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கட்டமைப்பதற்கு வசதியாக இருக்கும். அதனால் இப்போதே நீங்கள் ஃபான் கார்டுகளுக்கு மனு அளித்து பெற்றுக் கொள்ள வேண்டும்.  நாட்டில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர்கள் அனைவரும் தங்களது சொந்த பணத்தில் தொழில் துவங்குவது இல்லை அவர்கள் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் பிற வங்கிகளில் கடன் பெற்று தான் தொழில் துவங்குகிறார்கள் அவ்வளவு பெரிய நிறுவனங்களை கடன் பெறும்போது நீங்கள் கல்விக்காக தேவைப்படும் கடனை பெற்று படிப்பதற்கு பயப்படக்கூடாது. 


 


 




 


 


நமது மாவட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வங்கி கடன் வழங்குவதற்கு முதல் கட்டமாக வங்கிகள் தயாராக உள்ளது. தற்போது 685 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளார்கள் இன்னும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவதற்கு வங்கிகள் தயாராக உள்ளது.  நீங்கள் உங்கள் தெரிந்தவர்கள் நண்பர்களிடம் இதன் பயன்கள் குறித்து எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  Vidyalakshmi portal மூலம் இணையதள வாயிலாகவே வங்கி கடனுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். மாணவர்களும் இதற்கு ஒத்துழைப்பு நல்கி கல்வி கடனை பெற்று நல்லபடியாக படிப்பை முடித்து பெற்றோர்களின் கஷ்டத்தை குறைப்பதற்கு முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர்  கண்ணன், வங்கி அதிகாரிகள், மாணவ மாணவியர்கள்,  பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.