பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக சொல்கிறேன் என கிருஷ்ணகிரியில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது அவர் பேசியவை..
- பாஜகவுடன் கூட்டணி இல்லை என 25.9.2023ல் அறிவித்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை
- பாஜகவுடன் கூட்டணி இல்லை என இறுதியாகவும், உறுதியாகவும் கூறுகிறோம்
- சரியான நேரத்தில், அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்
- திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது
- கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே தொகுதிகளை வழங்க திமுக மறுக்கிறது
- வாக்களிக்கும் மக்களை மட்டுமே அதிமுக நம்புகிறது
- பாஜகவுடன் அதிமுக மறைமுக உறவு வைத்திருப்பதாக சிலர் கூறுகிறார்கள்
- முன்பே அறிவித்துவிட்டோம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இல்லை
- உறுதியாக சொல்கிறோம் பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை
- மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றி திமுக அரசாங்கம் நடத்துகிறது
- அத்தியாவசியப் பொருட்களின் விலை 40% உயர்ந்துள்ளது
- மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாங்கமாக திமுக இருக்கிறது
- திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்படுகிறார்கள்
- அதிமுக ஆட்சி அமைக்கும் காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் பாதுகாப்பாக உணருவார்கள்