தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துகொண்டே வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையை அடுத்த அமைந்தகரையில் இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்தால் நடுரோட்டில் ஒருவரை வெட்டிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அதுவும் பட்டப்பகலில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற்றப்போது தமிழக காவல்துறை என்ன செய்தது, இப்படியே தொடர்ந்தால் பொதுமக்களின் பாதுகாப்புதான் என்ன என்ற கேள்வி அடுத்தடுத்து எழுந்தது.
இந்தநிலையில், தமிழ்நாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தவில்லை என முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து இவர் வெளியிட்ட பதிவில், "சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன, இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது.
காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் விடியா அரசின் முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தாமல் பத்திரிக்கைகளின் கருத்துக்களை முடக்குவதிலே முழு முயற்சியுடன் இருப்பதால், தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது " என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்