• தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவில்லாமல் செயல்பட அனுமதிக்கப்படும்.

  • மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர்.

  • அனைத்து அரசு அலுவலகங்கள், 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

  • வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், தானியங்கி பணம் வழங்கும் (ATM) சேவைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

  • இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) மற்றும் அதன் செயல்பாடுகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

  • இதர தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

  • தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

  • வீட்டு வசதி நிறுவனம் (HFCs) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), குறு நிதி நிறுவனங்கள் (MFIs) 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

  • உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், குளிர் சாதன வசதி இல்லாமல், ஒரே நேரத்தில் 50% பர்களுடன் முறையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கமாக செயல்படும் நேரத்தில் அனுமதிக்கப்படும்.

  • அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.


பொது



  • அனைத்து கடற்கரைகளிலும், காலை 5 மணி முதல் காலை 9.00 மணி வரை நடை பயிற்சி செய்ய அனுமதிக்கப்படும்.

  • தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.


திருமணங்களுக்கான பயண அனுமதி



  • வகை 2 மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களுக்கிடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ்/இ-பதிவு இல்லாமல் பயணிக்கலாம்.

  • வகை 1-ல் உள்ள மாவட்டங்களுக்கிடையேயும், வகை 2, 3 ஆகியவற்றில் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை-1-ல் உள்ள மாவட்டங்களுக்கும்  திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கப்படும். இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக (https://eregister.tnega.org) மணமகன் /மணமகள் அல்லது அவர்களது பெற்றோர் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். வகை-1ல் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை-2, 3-ல் உள்ள மாவட்டங்களுக்கு திருமணத்திற்காக பயணிக்கவும் இ-பாஸ் பெறவேண்டும்.

  • திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

  • நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.