DVAC Raid: ரெய்டு நடக்கும் எஸ்.பி வேலுமணியின் குனியமுத்தூர் வீட்டின் முன்பு முகாமிட்ட 8 எம்.எல்.ஏக்கள்..!

வெள்ளை அறிக்கையில் எதுவும் இல்லை. அது அவர்களுக்கு சிவப்பு அறிக்கையாக எச்சரிக்கையாக மாறிவிட்டது - பொள்ளாச்சி ஜெயராமன்

Continues below advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் உள்பட 52 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், குனியமுத்தூரில் வேலுமணியின் வீட்டின் முன்பு 8 அதிமுக எம் எல் ஏக்கள் முகாமிட்டுள்ளனர்.

Continues below advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் உள்பட 52 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் நிறுவனங்கள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் காலையில் இருந்து ரெய்டு நடைபெற்று வரும் நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை சுகுணாபுரத்திலுள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டு கோஷங்கள் எழுப்புதவால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரின் வீட்டின் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

810 கோடிப்பே... வேலுமணி மீதான புகார்கள்.. வெளியான முழு விவரம்..!

இந்த நிலையில்,  குனியமுத்தூரில் உள்ள வேலுமணியின் வீட்டின் முன்பு 8 அதிமுக எம்எல்ஏக்கள் முகாமிட்டுள்ளனர். கோவை வடக்கு - அம்மன் அர்ச்சுணன், கிணத்துக்கடவு - செ.தாமோதரன், கவுண்டம்பாளையம் - பி.ஆர்.ஜி. அருண்குமார், சூலூர் - கந்தசாமி, பொள்ளாச்சி - ஜெயராமன், மேட்டுப்பாளையம் - ஏ.கே.செல்வராஜ், வால்பாறை - அமல் கந்தசாமி, சிங்காநல்லூர் - கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் அங்கு உள்ளனர்.


லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை குறித்து நமது ஏபிபி நாடுக்கு சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த பேட்டியில், “இந்த சோதனை அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைகள் ஆகும். உள்ளாட்சி தேர்தலில் எங்களை சோர்வடைய வைக்கவே இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கைகள் எங்களை சோர்வடைய வைக்காது. ஒப்பந்தங்கள் நேரடியாக அமைச்சர் கொடுப்பதில்லை. அதிகாரிகளுக்குதான் தெரியும். இந்த சோதனையால் அதிமுக கோவை மாவட்டத்தில் இன்னும் வலுவடையும். மாலை வரை நடந்தால் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள். இந்தச் சோதனையால் அனைத்து எம்.எல்.ஏக்களும் ஒரே நேரத்தில் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியும், அதிகாரமும் திமுகவிடம் இருப்பதால் சோதனை நடத்துகின்றனர். இந்த போக்கை கைவிட வில்லை என்னில் திமுக இன்னும் பின்னடைவை சந்திக்கும். திமுக கொடுத்த 506 வாக்குறுதிகளில் ஒன்றிரண்டு மட்டுமே நிறைவேற்றி இருக்கின்றனர். திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். வெள்ளை அறிக்கையில் எதுவும் இல்லை. அது அவர்களுக்கு சிவப்பு அறிக்கையாக எச்சரிக்கையாக மாறிவிட்டது” என்று கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்சஒழிப்புத்துறை புகார் பதிவு செய்து அவருக்குச் சொந்தமான 52 இடங்களில் தற்போது ரெய்டு நடத்தி வருகிறது. தன்னை சார்ந்தவர்களுக்கு சென்னை பெருநகர மாநகராட்சியில் சுமார் ரூ. 463 கோடி அளவிலான டெண்டர்கள் ஒதுக்கீடு மற்றும் கோவை மாநகராட்சியில் ரூ. 342 கோடி அளவில் டெண்டர் ஒதுக்கீடு செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகிறது.

SP Velumani house Raid : DVAC சோதனை..எந்தெந்த நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு?

Continues below advertisement
Sponsored Links by Taboola