தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக்கொண்டார். ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில், அவருக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11-ஆம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். 


இந்நிலையில்,  நீர்வளத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட துரைமுருகன், பேரவை முன்னவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது