TN Rain Update: கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


4 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை:


தென்மேற்கு √ங்கக் ங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், மயிலாடுதுறை, அரியலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.


பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:


கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, புதுச்சேரியிலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை:


கனமழை எச்சரிக்கை காரணமாக அத்தியாவசிய தேவைகளை தவிர்த்த மற்ற அரசு அலுவலகங்களுக்கும் இன்று குறிப்பிட்ட மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


ரயில் சேவைகள் ரத்து: 


கனமழை எச்சரிக்கை காரணமாக சில ரயில் சேவைகளையும் இன்று ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி,



  • சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று  இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு போடிநாயக்கனூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (20601) ரத்து

  • ஜோலார்பேட்டையில் இருந்து இன்று காலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (16090) ரத்து

  • மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 5.55 புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (16089) ரத்து

  • திருப்பதியிலிருந்து இன்று காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16204), மறுமார்க்கமாக,சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16203) ரத்து

  • திருப்பதியில் இருந்து இன்று காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (16057) ரத்து

  • ஈரோட்டில் இருந்து இன்று இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் ஏற்காடு அதிவிரைவு ரயில் (22650) ரத்து


மெட்ரோ ரயில் சேவை:


அதேநேரம், மெட்ரோ ரயில் சேவை இன்று அதிகாலை 5 மணி தொடங்கி நள்ளிரவு 11 மணிவரை வழக்கம்போல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கியுள்ள நிலையங்களில் மட்டும் மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • பசுமை வழித்தடமாக உள்ள புரட்சி தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ வரை, ஒவ்வொரு 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்

  • ப்ளூ லைன்: விமானம் நிலையம் முதல் விம்கோ நகர் டிப்போ இடையே ஒவோரு 6 நிமிடத்திற்கும் இடயே மெட்ரோ ரயில் இயக்கப்படும்

  • வண்ணாரப்பேட்டை மெட்ரோ & அறிஞர் ஆலந்தூர் மெட்ரோ இடையே ஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படும்


முன்னதாக நேற்று கனமழை மற்றும் போதிய பயணிகள் இல்லாததால் சில விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.