முகாம்கள் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது.




கரூர் மாவட்டத்தில் மது குற்றங்கள் அதிகமாக உள்ள இடங்களை கண்டறிந்து விழிப்புணர்வு முகாம் நடத்துவது குறித்தும், மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு தொடர்பாக தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ள ஏற்பாடு செய்தல் குறித்தும், மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு குறித்தும், பள்ளி மாணவ மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடத்துவது குறித்தும், மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு குறித்து ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்வது குறித்தும், மதுப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு துண்டுபிரசுரம், பேனர்கள், போஸ்டர்கள் தயாரித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் விளம்பரம் செய்வது குறித்தும், ஸ்டிக்கர்கள் அச்சடித்து வாகனங்கள் மூலம் விளம்பரம் செய்வது குறித்தும், போதைப் பொருட்களுக்கு எதிராக நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெரும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது குறித்தும், சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது குறித்தும், மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் முகாம்கள் அனைத்து பகுதிகளிலும் முறையாக நடைபெறுவதற்கு போதுமான ஒத்துழைப்பு வழங்குதல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ம.லியாகத், திட்ட இயக்குநர்(மகளிர்திட்டம்)திரு.சீனிவாசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்(மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு) திரு.மோகன், உதவி ஆணையர்(கலால்) திரு.பாலசுப்ரமணியன், மாவட்ட மேலாளர் (தமிழ்நாடு மாநில வாணிப கழகம்) திரு.சண்முகவடிவேல் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டுறங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு பணிகள் மற்றும் மகப்பேறு மரணம் குழந்தை மரணம் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.


கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் கீழ்க்கண்ட கருத்துருக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின்போது மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு எல்லா மருத்துவ மனைகளிலும் குறைந்தது மூன்று மாத இருப்புகள் இருப்பதை அந்தந்த மருத்துவர்கள் உறுதி செய்து கொள்ளவும். மேலும், வரும் மழைக் காலங்களில் ஏற்படக்கூடிய காய்ச்சல் மற்றும் டெங்கு பணிகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு வரும் காலங்களில் காய்ச்சல் மற்றும் டெங்குவினால் தீவிர நோய் பரவல் ஏற்படா வண்ணம் இருக்கவும்.


இதே போல் குழந்தை மரணம் குறித்தும் ஒவ்வொரு குழந்தை பிறந்த பின்பும் பிரசவ கால பின் கவனிப்பு 48 நாட்கள் வரை கட்டாயம் கிராம சுகாதார செவிலியர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் தொடர்ந்து. கரூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், தொற்றுநோய்கள் கண்டறிவது மற்றும் மக்களை தேடி மருத்துவம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு இதில் கண்டறியும் விகிதம் அதிகரிக்கவும், குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படும் நோய்கள் கண்டறிதல் பற்றி ஆய்வு செய்து பிறவி என்ன செய்கிறான் காது கேளாமை போன்ற நோய்கள் கண்டறிதல் துரிதமாக கண்டறியவும்.



 


இரண்டுக்கும் மேற்பட்ட நலமுடன் வாழக்கூடிய குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் மற்றும் தந்தைகளுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கருவுற்ற தாய்மார்களுக்கு ரத்த சோகையினால் ஏற்படும் பிரச்சனைகளை குறித்து ஆய்வு செய்து, அவற்றை சரி செய்வது குறித்து ஆலோசனைகள் வழங்க வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மா. சீனிவாசன் இணை இயக்குனர் சுதர்சன ஏசுதாஸ் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.