✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Driving license: ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று அஞ்சல் மூலமே அனுப்பப்படும்..நேரடியாக வழங்கப்படாது...எப்படி பெறுவது?

செல்வகுமார்   |  28 Feb 2024 09:50 PM (IST)

தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச்சான்று ஆகியவை அஞ்சல் மூலமே அனுப்பும் வகையிலான திட்டமானது இன்றுமுதல் அமலுக்கு வந்தது.

ஓட்டுநர் உரிமம்

பதிவுச்சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பும் திட்டத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 91 ஆர்டிஓ அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள் ஆகியவற்றிலிருந்து ஒப்புதல் அளிக்கப்படும் பதிவுச் சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை இனி விரைவு அஞ்சல் மூலமாகவே விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த சேவை இன்று ( 28.02.2024 )  முதல் நடைமுறைக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பொதுமக்களுக்கு இந்த சேவையை பெற கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன:

இன்று ( 28.02.2024 ) முதல் அனைத்து ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பதிவுச்சான்றுகள் விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கப்படமாட்டாது.

வாகன் மற்றும் சாரதி மென்பொருளில் அலைபேசி எண் மற்றும் முகவரி ஆகிய இரண்டும் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால், அத்தகைய நேர்வுகளில் பதிவுச்சான்றுகளும் ஓட்டுநர் உரிமங்களும் விரைவு அஞ்சல் மூலம் டெலிவரி செய்யப்படமாட்டாது. அத்தைகைய தபால்கள் மீண்டும் ஆர்டிஓ மற்றும் பகுதி அலுவலகங்களுக்கு தபால் துறையால் டெலிவரி செய்யப்படாமல் திருப்ப அனுப்பப்பட்டுவிடும்.

நேரடியாக வழங்கப்படாது:

அத்தகைய நேர்வுகளில் வாகன் மற்றும் சாரதி மென்பொருள்  சரியான முகவரி மற்றும் அலைபேசி எண்ணைப் பதிவு செய்வதற்கு உரிய விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்தி,  அவ்விரு விவரங்களும் திருத்தம் செய்யப்பட்ட பின்னரே ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்று ஆகியவற்றை விரைவு அஞ்சலில் மீண்டும் அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நேர்வுகளில் விண்ணப்பதாரர் ஆர்டிஓ  மற்றும் பகுதி அலுவலகத்தை அணுகினாலும் அவருக்கு உரிய சான்று நேரடியாக வழங்கப்படமாட்டாது.

பொதுமக்கள் இந்த சேவையினைப் பெறுவதற்கு தங்களின் அலைபேசி எண்ணையும் மட்டுமே தங்களது ஒட்டுநர் உரிமம்/பதிவுச் சான்று விண்ணப்பங்களில் தெளிவாக குறிப்பிட வேண்டும். மாறாக  ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளின் முகவரியையோ அலைபேசி எண்ணையோ குறிப்பிட்டு இருந்தால் அவர்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் தகுதிச்சான்று தற்காலிக முடக்கம் செய்யப்படும்

விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளபடி மீண்டும் வாகன்/சாரதி மென்பொருளில் தங்களது சரியான முகவரியையும் அலைபேசி எண்ணையும் உள்ளீடு செய்து மீண்டும் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த பின்னரே அது ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய ஒட்டுநர் உரிமம் /தகுதிச்சான்று விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இந்த விரைவு அஞ்சல் சேவையை நமது மாநிலத்தில் துவக்கி வைத்திருப்பதன் மூலம் ஆர்டிஓ/பகுதி அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரடியாக வருவது கணிசமாகக் குறையும் என போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர், முதன்மை செயலாளர் (உள்துறை) திருமதி.பெ.அமுதா போக்குவரத்து ஆணையர் மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் திரு.சண்முகசுந்தரம் . உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Published at: 28 Feb 2024 09:50 PM (IST)
Tags: Tamil Nadu Registration minister sivasankar driving license post office
  • முகப்பு
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • Driving license: ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று அஞ்சல் மூலமே அனுப்பப்படும்..நேரடியாக வழங்கப்படாது...எப்படி பெறுவது?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.