சென்னை: மத்திய தொலைத்தொடர்பு சார்பில் 'சஞ்சார் சாதி' இணையதளம் மூலம் தமிழகத்தில் தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களில் 36% மீட்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தமிழகத்தில் தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களில் 36 % மீட்பு.

மத்திய தொலைத்தொடர்பு துறையின் தமிழக துணை இயக்குநர் ஜெனரல் திரு. சுதாகர் கூறுகையில், 'சஞ்சார் சாதி' (Sanchar Saathi) என்ற இணையதளம் மூலம் தமிழகத்தில் தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களில் 36% மீட்கப்பட்டுள்ளன.

'சஞ்சார் சாதி' இணையதளம்: ஓர் அறிமுகம்

Continues below advertisement

நாட்டில் அதிகரித்து வரும் மொபைல் போன் திருட்டுப் புகார்களைக் கையாண்டு, தொலைந்த போன்களை மீட்கும் நோக்குடன் மத்திய தொலைத்தொடர்பு துறை இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் தளத்தில் தினமும் புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்படுகிறது.

'சஞ்சார் சாதி' இணையதளத்தின் 7 முக்கிய அம்சங்கள்:

ஆன்லைன் புகார்: 

மொபைல் போன் தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டுவிட்டால், அதுகுறித்து உடனடியாக ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.

போனை 'பிளாக்' செய்தல்: 

புகார் அளித்தவுடன், திருடப்பட்ட மொபைல் போன் உடனடியாக 'பிளாக்' (Block) செய்யப்படும். இதனால் யாரும் அதைப் பயன்படுத்த முடியாது.

சிம் கார்டு புகார்: 

உங்கள் பெயரில் உங்களுக்குத் தெரியாமல் வாங்கப்பட்ட 'சிம் கார்டு'கள் குறித்து புகார் அளிக்க முடியும்.

 தேவையற்ற சிம் கார்டை நீக்குதல்: 

தேவையில்லாத சிம் கார்டுகளை நிரந்தரமாக நீக்கவும் இந்த அம்சம் உதவுகிறது.

 ஐ.எம்.இ.ஐ. (IMEI) எண் சரிபார்ப்பு: 

பழைய மொபைல் போன்களைப் புதியது போல சந்தையில் விற்பதைத் தடுக்க, போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை இணையதளத்தில் உள்ளீடு செய்து அதன் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

தேவையற்ற அழைப்புகளைக் கண்டுபிடித்தல்

வெளிநாட்டில் இருந்து வரும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் மோசடிக்காரர்களின் எண்களைச் சிரமமின்றி கண்டுபிடிக்க முடியும்.

எப்.எப்.ஆர்.ஐ. (FFRI) அம்சம்: 

உண்மையிலேயே வங்கியில் இருந்துதான் தொடர்பு கொள்கிறார்களா என்பதை ஆராய்ந்து உறுதிப்படுத்த இந்த அம்சம் உதவுகிறது. தற்போது பல வங்கிகள் இதில் இணைந்து வருவதால், வரும் நாட்களில் நிதிசார் குற்றங்கள் குறையும் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏமாறாமல் இருப்பார்கள் 

மேலும் விவரங்களுக்கு: 

பொதுமக்கள் www.sancharsaathi.gov.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

 தமிழகத்தில் மொபைல் போன் திருட்டு மற்றும் மீட்பு விவரம்

2023 மே மாதத்தில் இருந்து தற்போது வரை, தமிழகத்தில் 1.83 லட்சம் மொபைல் போன் திருட்டுப் புகார்கள் வந்துள்ளன. இதுவரை, காவல்துறை உதவியுடன் 41,229 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மற்ற செல்போன் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மீட்பு விகிதத்தில் இடம்: 

திருடு போன மற்றும் தொலைந்து போன மொபைல் போன் மீட்பு விகிதத்தில், இந்தியா அளவில் தமிழகம் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு மேம்பாடு: 

5ஜி டவர்கள் பொது மக்களுக்கு நீடித்த மற்றும் சிரமமில்லா தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்காக, மத்திய அரசு கிராமங்கள் முதல் நகரங்கள் வரை உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வருகிறது.

கிராமங்களில் 5ஜி: 

தமிழகத்தில் உள்ள 5,297 கிராமங்களில் '5ஜி டவர்'கள் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது.

 மொத்த டவர்கள்: 

தமிழகம் முழுவதும் இதுவரை 35,655 '5ஜி டவர்'கள் செயல்பாட்டில் உள்ளது.