கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் மாவட்ட அமைத்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.


 




அப்பொழுது மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் மணிராஜ், நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், குளித்தலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா.மாணிக்கம், நெசவாளர் அணி செயலாளர் பரணி மணி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகரச் செயலாளர் எஸ் பி கனகராஜ், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர் கந்தசாமி, கரூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வான்மதி சிதம்பரம், போளூர் நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான குணசேகரன், திமுக செயற்குழு உறுப்பினர்களான காலனி செந்தில், சாலை சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் புகலூர் சுவாமிநாதன், வாங்கல் வேலுச்சாமி உள்ளிட்ட முன்னிலை வகித்தனர்.



நிகழ்ச்சியில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னை நிதித்துறை வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் மாளிகையில் பள்ளி கல்வித்துறை வளாகத்திற்கு அன்பழகன் கல்வி வளாகம் என பெயர் சூட்டி 75 ஆயிரம் கோடி மதிப்பில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் அறிவித்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



மேலும் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் டிசம்பர் 19 ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, அனைத்து நகராட்சி, பேரூர் கழக வார்டுகள் உள்ளிட்ட பகுதிகளில் என மொத்தம் 1047 இடங்களில் அன்பழகன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது . மாவட்டத்தில் 6 பகுதி கழகங்கள், 3 நகர கழகங்கள், 16 ஒன்றிய கழகங்கள், 8 பேரு கழகம் என மொத்தம் 33 இடங்களில் சிறப்பு பொதுக்கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ஜவுளி ஏற்றுமணியின் பல மடங்கு அதிகரிக்கும் வகையில் கரூர், திருப்பூர், காஞ்சிபுரம் ஜவுளி ஏற்றுமதி மையங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


 




உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் திடீரென அறிவிக்கப்பட்டதுடன் இந்த கூட்டத்திற்கு ஏராளமான திமுக முக்கிய நிர்வாகிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் எம் எஸ் கருணாநிதி, பூவே ரமேஷ் பாபு, மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் கே கருணாநிதி ,கோயம்பள்ளி பாஸ்கர், எம் ரகுநாதன், கழக வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, மாநகராட்சி மண்டல தலைவர் அன்பரசன், ஆர் எஸ் ராஜா, வெங்கமேடு சக்திவேல் பகுதி கழகச் செயலாளரான வழக்கறிஞர் சுப்பிரமணியன், கரூர் கணேசன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகளும் ஒன்றிய கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


 




கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் க.பரமத்தி தெற்கு ஒன்றியம் நடந்தே ஊராட்சியை சேர்ந்த நடந்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார், நடந்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி ஒன்றிய துணைச் செயலாளர் பிரித்தி விஜயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி மின்சார துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ உடனிருந்தார்.