கரூருக்கு முதலமைச்சர் விஜய் செல்வதால் திமுக பயப்படுவதாக சொன்ன தவெக அமைச்சர் நிர்மல் குமாரை முரசொலி நாளிதழ் கடுமையாக சாடியுள்ளது. 

Continues below advertisement

இதுதொடர்பாக தலையங்கத்தில் வெளியான கட்டுரையில், “கரூ­ருக்கு முத­ல­மைச்­சர் விஜய் செல்­கி­றார் என்­ற­தும் திமுக பயப்­ப­டு­கிறது. கரூர் மக்­களை முத­ல­மைச்­சர் விஜய் சந்­திப்­ப­தைப் பார்த்து திமுக பயப்­ப­டு­கி­றது” என்று அமைச்­சர் நிர்­மல்­கு­மார் புலம்பி இருக்­கிறார். எந்த நிர்­மல் குமார்? கரூர் சம்­ப­வத்­தில் போலீஸ் தேடி­ய­போது தலை­ம­றை­வாக இருந்­தாரே அந்த நிர்­மல்­கு­மார். இப்­போது அமைச்­சர் ஆன­தும் ஏதோ தைரி­ய­சா­லி­யைப் போல போக்­குக் காட்­டு­கி­றார்.

கரூ­ரில் ஒவ்­வொரு உயி­ரா­கப் போய்க் கொண்டு இருந்­த­போது பயந்து அங்­கி­ருந்து ஓடி வந்­த­வர்­தான் விஜய். கரூ­ரில் இருக்­கா­மல் திருச்­சிக்கு ஓடி      வந்­தார். அவ­ரைச் சுற்றி இருக்­கும் அனை­வ­ரும் செல்­போனை அணைத்து வைத்து விட்­டார்­கள். திருச்சி விமான நிலை­யத்­தில் சூழ்ந்து கத்­திய அனைத்து ஊட­கங்­க­ளை­யும் பார்க்­கா­மல் சென்­னைக்கு ஓடி வந்து விட்­டார் விஜய். சென்னை விமான நிலை­யத்­தி­லும் ஊட­கங்­கள் குரல்                   எழுப்­பி­னார்கள். அவர்­க­ளைப் பார்க்­கா­மல் பயந்து போய் தனது வீட்­டுக்கு வந்து பதுங்­கிக் கொண்­டார் விஜய். அதன்­பி­றகு அவ­ரைப் பல நாட்­கள் பொது­வெளி­யில் காண­வில்லை. வெளியே வர­வில்லை. தனது சுற்­றுப் பய­ணங்­க­ளையே ரத்து செய்து விட்­டார் விஜய்.

Continues below advertisement

41 உயிர்­கள் பலி­யான குடும்­பத்­தைப் பார்க்க விஜய் அதோ வரு­கிறார், இதோ வரு­கி­றார், அன்று வரப் போகி­றார், இன்று வரப்­போ­கி­றார் என்று        ஊட­கங்­கள் செய்தி போட்டு விஜய்யை உசுப்­பி­விட்­டார்­களே தவிர, அவர் வரவே இல்லை. 41 உயிர்­க­ளைப் பலி கொடுத்த குடும்­பத்­தி­னரை சென்­னைக்கு வரவழைத்­துப் பார்த்த அசிங்­கத்­தை­யும் விஜய்யே செய்­தார்.

27.9.2025 அன்று நடந்த கொடூ­ர­மான சம்­ப­வத்­துக்கு பொறுப்­பேற்க வேண்­டி­ய­வர்­க­ளாக மூன்று பேர் மீது அப்­போது கரூர் நகர காவல் நிலை­யத்­தில் வழக்­குப் பதி­வா­னது. தவெகவின் கரூர் மேற்கு மாவட்­டச் செய­லா­ளர் மதி­ய­ழ­கன், கட்சி பொதுச்­செ­ய­லா­ளர் புஸ்சி ஆனந்த், கட்சி நிர்­வாகி நிர்­மல்­கு­மார் என்று குறிப்­பி­டப்­பட்­டது. விஜய் பெயர்

அப்­போது சேர்க்­கப்­ப­ட­வில்லை.  பழி­வாங்­கும் நட­வ­டிக்கை என்று அப்­போதே சொல்லி இருப்­பார்­கள். இருந்­தா­லும், விஜய்க்கு பயம். அத­னால்­தான் உடனே சி.பி.ஐ. விசா­ரணை கேட்டு நீதி­மன்­றத்தை நாடி­னார்­கள்.  போலீஸை வைத்­துச் செய்து விட்­டார்­கள் என்று இன்று குற்­றம் சாட்­டுகி­றார்­களே. ஆனால் அன்­றைய தினம் விஜய் என்ன பேசி­னார்?. நான் இங்கு எப்­படி வந்­தேன் என்றே தெரி­ய­வில்லை. இதற்­காக காவல்துறை­யி­ன­ருக்கு நன்றி கூறுகி­றேன்” என்­று­தான் பேசி­னார். 

 விஜய் அங்கு மதி­யம் 12 மணிக்­குப் பேசு­வார் என்று தவெக சார்­பில் அறி­விக்­கப்­பட்­ட­தால் அவ­ரைப் பார்க்க காலை முதலே ஏரா­ள­மா­னோர் குவிந்­து விட்­ட­னர். பல மணி­நே­ரம் தண்­ணீர் குடிக்­கா­மல், உணவு அருந்­தா­மல் காத்­தி­ருந்த அந்­தப் பெருங்­கூட்­டம் களைப்­பால் துவண்டு போயி­ருந்த நிலை­யில் இரவு 7 மணிக்­குத்­தான் விஜய் வந்­தார். எனவே விஜய்­யும் அவ­ரது கட்­சிக்­கா­ரர்­க­ளும் சொல்­வது முழுப்­பொய் என்­பதை பழைய நாளி­தழ்­களே சொல்லும்.

அத­னால்­தான் முன் ஜாமின் கேட்டு  ஆனந்த், சென்னை உயர்­நீ­தி­மன்ற மது­ரைக் கிளை­யில் மனு போட்­டார். ஜாமின் கிடைக்­குமோ கிடைக்­காதோ என்ற பயத்­தில் தலை­ம­றைவானார். இதே­போல் முன் ஜாமின் மனு போட்­ட­வர்­தான் இன்­றைய ஆகாச சூரர் நிர்­மல்­கு­மார். அவ­ரும் எங்கோ பதுங்கினார்.நிகழ்ச்சி ஒருங்­கி­ணைப்­பா­ளர்­கள் அவர்­கள்­தான் எனும் போது, அவர்­கள் தானே நடந்த சம்­ப­வத்­துக்­குப் பொறுப்­பேற்க வேண்­டும் என்று சொல்லி  ஆனந்த், நிர்­மல்­கு­மார் ஆகி­யோ­ரின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்­நீ­தி­மன்ற மது­ரைக் கிளை ரத்து செய்­ததை நிர்­மல்­கு­மார் மறந்து விட்­டாரா? தலை­ம­றை­வாக இருந்த நேரத்­தில் நடந்­ததை அறி­ய­வில்­லையா?

Also Read: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?

அர­சி­யல் கட்­சி­க­ளின் கூட்­டங்­களை முறைப்­ப­டுத்த வேண்­டும் என்று சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் தாக்­க­லான வழக்­கில் தீர்ப்­ப­ளித்த நீதிபதி செந்தில்­கு­மார்,  விஜய்க்கு தலை­மைப் பண்பு இல்லை என்று சொன்­னதை யாரும் மறந்­தி­ருக்க முடி­யாது.

 கரூர் சம்­ப­வத்­தில் பெண்­கள், குழந்­தை­கள், பலி­யான நிலை­யில் அக்­கட்­சித் தொண்­டர்­களை, ரசி­கர்­களை பொறுப்­பற்ற முறை­யில் கைவிட்டு ஓடிய தவெக தலை­வர் விஜய் உள்­ளிட்ட நிர்­வா­கி­க­ளுக்­குத் தலை­மைப் பண்பு இல்லை. அவர்­கள் சம்­ப­வத்­துக்­குப் பொறுப்­பேற்­க­வும் இல்லை. தவெக தனது பொறுப்­பைத் தட்­டிக் கழிக்க முடி­யாது. கரூர் விபத்து மனி­த­ரால் உரு­வாக்­கப்­பட்ட பேர­ழிவு என்று கடு­மை­யான சொற்­க­ளால் குறிப்­பிட்­டார் நீதிபதி செந்­தில்­கு­மார். விஜய் பயந்து போய் ஓடிப்­போ­னார் என்­பதை சென்னை உயர்­நீ­தி­மன்­றமே சொன்­னது. ‘விஜய் சென்ற பிரச்­சார வாக­னத்தை ஏன் பறி­மு­தல் செய்­ய­வில்லை?’ என்­றும் நீதிபதி கேட்­டார்.

ஆனந்­தும், நிர்­மல்­கு­மா­ரும் தலை­ம­றை­வா­கிய நிலை­யில் தவெக கரூர் மாவட்­டச் செய­லா­ளர் மதி­ய­ழ­கனை காவல்துறை அன்று கைது செய்­தது. உடனே,  இலங்கை, நேபா­ளத்தை போல புரட்சி வெடிக்­கும்  என்று லாட்­டரி மாதிரி பத­வி­க­ளைப் பெற்று வரும் ஆதவ் அர்­ஜூன் பதிவு போட்­டார். இதுவும் நீதி­ப­தி­க­ளால் கண்­டிக்­கப்­பட்­டது. ‘இவர்­கள் என்ன சட்­டத்­துக்கு அப்­பாற்­பட்­ட­வர்­களா?’ என்று கேட்­டது உயர்­நீ­தி­ மன்­றம். இதன் மீது சட்­ட­பூர்­வ­மான நட­வ­டிக்கை எடுக்க அர­சுக்கு உத்­த­ர­விட்­டார் நீதி­பதி. அதன்­பி­றகு ஆதவ் அர்­ஜூ­னா­வும் தலை­ம­றைவு ஆனார். இது பயத்­தி­னால் தானே?” என சரமாரியாக முரசொலி விமர்சித்துள்ளது.