நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் மக்களவையில்  இன்று தி.மு.க.வைச் சேர்ந்த நீலகிரி எம்.பி. ஆ.ராசா பேசினார். அவர் பேசும்போது, என்னுடைய தொகுதியான நீலகிரியில் மனிதன் மீது விலங்குகள் தாக்குதல் நடத்தும் நிலை உள்ளது.  இந்த ஒரு மாத இடைவெளியில் மூன்று நபர்கள் அடுத்தடுத்து புலிகளால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூன்று பேரும் உயிரிழந்துவிட்டனர்.



இதுபோன்ற விவகாரங்கள் தொடர்பாக உங்களது தலைமை அதிகாரி முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்றால், அந்த பகுதிக்கு செல்ல வேண்டும். அந்த மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்த வேண்டும். அந்த கிராம பஞ்சாயத்து அலுவலருடன் ஆலோசனை நடத்த வேண்டும். மாவட்ட வனத்துறை அதிகாரியுடன் ஆலோசனை நடத்த வேண்டும். இத்தனை நாட்களுக்கு பிறகுதான் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் ஏராளமான உயிர்களை இழக்க நேரிடுகிறது.





என்னுடைய பணிவான வேண்டுகோள் என்னவென்றால், மாவட்ட மேஜிஸ்திரேட், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருடன் ஆலோசித்து புதிய முடிவு எடுப்பதற்கு முன்பு தாக்குதல் நடத்திய அந்த விலங்குகளை அகற்றுங்கள் அல்லது வேறு இடத்திற்கு மாற்றுங்கள். என்னுடைய தொகுதி சென்னையில் இருந்து 300 கி.மீ. தொலைவிற்கு அப்பால் உள்ளது. எனவே. தலைமை வனத்துறை அதிகாரி, வனத்துறை செயலாளர் அங்கே சென்று முடிவு எடுங்கள். இல்லாவிட்டால் ஏராளமானோரை இழக்க நேரிடும். ஏனெனறால் இது மிகவும் முக்கியமான விவகாரம். முறையாக முடிவு செய்து நடவடிக்கை எடுங்கள்.”


இவ்வாறு அவர் பேசினார். மக்களவையில் ஆ.ராசா ஆவேசமாக பேசிய இந்த பேச்சுக்கு தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் மேசையைத் தட்டி ஆதரவு தெரிவித்தனர். 




தமிழ்நாட்டின் அழகிய பகுதியான ஊட்டி உள்பட பல அழகான பகுதிகளும், தேயிலைக்காடுகளும், மலைக்கிராமங்களும் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான நீலகிரியின் அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. சமீபகாலமாக சுற்றுச்சூழலில் ஏற்பட்ட பாதிப்பால் வன விலங்குகள் மனிதன் வசிக்கும் கிராமங்களுக்குள் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால். உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு டி23 என்ற புலி நீலகிரியில் ஆட்கொல்லி புலியாக உலா வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த புலியை வனத்துறையினர் பிடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : 100 ஏக்கர் நிலம்.. 25 ஆண்டுகள் உழைப்பு.. கட்டாந்தரையை காடாக்கிய தனி ஒருவர்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண