தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக-வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர். அவர் தனது இளம் வயதில் கிரிக்கெட் விளையாடியது குறித்து பல்வேறு பேட்டிகளில் பகிர்ந்துள்ளார்.

Continues below advertisement

சுழற்பந்து வீச்சாளராக மு.க.ஸ்டாலின்:

சமீபத்தில் நடந்த மாணவர்களுடனான சந்திப்பில் தான் கிரிக்கெட் விளையாடியதை பகிர்ந்து கொண்டார். மேலும், தான் ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்றும் நடிகர்கள் சிலம்பரசன் மற்றும் நெப்போலியன் விக்கெட்டை வீழ்த்தியதாக கூறினார். 

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியதைத் தொடர்ந்து அவரை பலரும் விமர்சித்தனர். இந்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில், மு.க.ஸ்டாலின் உலகக்கோப்பையை வென்று தந்த கபில்தேவிற்கு எதிராக கிரிக்கெட் ஆடிய வீடியோவை தற்போது திமுக வெளியிட்டுள்ளது. 

Continues below advertisement

3 விக்கெட்டுகள்:

சென்னையில் நடந்த இந்த போட்டியில் மு.க.ஸ்டாலின் தனது சுழலில் நடிகர் சிலம்பரசன், நடிகர் அனுபம் கெர் மற்றும் நெப்போலியனை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். சிம்பு அடித்த பந்தை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேட்ச் பிடிக்கிறார்.

அனுபம் கெர் ஸ்டாலினின் சுழலில் எல்பிடபுள்யூ ஆகினார். நெப்போலியன் ஸ்டாலின் சுழலில் போல்டாகினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. மு.க.ஸ்டாலின் கிரிக்கெட் ஆடியதை விமர்சித்த பலருக்கும் இந்த வீடியோ தக்க பதிலடியாக அமைந்துள்ளதாக திமுக ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும்:

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக ஆடிய கபில்தேவ் லெவன் அணியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜடேஜா, வெங்கடேஷ், ராகுல் டிராவிட்,   ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் ஆகிய கிரிக்கெட் வீரர்கள் ஆடியுள்ளனர். மேலும், மு.க.ஸ்டாலினுடன் இணைந்து கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் ஆடினர். 

திரை பிரபலங்களான அனுபம் கெர், பிரபுதேவா, அருண் பாண்டியன், நெப்போலியன், அரவிந்த்சுவாமி உள்ளிட்ட பலரும் இந்த போட்டியில் ஆடியுள்ளனர். பிரபலங்களைப் பார்ப்பதற்காகவும், கிரிக்கெட் வீரர்களைப் பார்ப்பதற்காகவும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குழுமியுள்ளனர்.