புதுச்சேரி : புதுச்சேரி மின்துறையின் திட்டமிட்ட பராமரிப்பு பணிகளையொட்டி, இன்று 9-7-2026 இரண்டு துணை மின் நிலையங்களிலிருந்து மின்விநியோகம் பெறும் பல கிராமப்புற பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருபுவனை துணை மின் நிலையம்:
திருபுவனை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் செல்லிப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருவண்டார்கோவில், கொத்தபுரிநத்தம், சன்னியாசிக்குப்பம், திருபுவனை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
தொண்டமாநத்தம், துணை மின் நிலையம்:
தொண்டமாநத்தம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பிள்ளையார்குப்பம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செல்லிப்பட்டு, சோராப்பட்டு, வம்புப்பட்டு, விநாயகம்பட்டு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து, பணிகள் நிறைவடைந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்துறை தெரிவித்துள்ளது.
எனவே, மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது அன்றாட பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மின்துறை கிராம கோட்டம் செயற்பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார்.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை
