தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பொதுக்கூட்டம் நடத்த தி.மு.க. தலைமை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, சென்னை சாலிகிராமத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தி.மு.க.வினர் ஏராளமானோர் கூடியிருந்த இந்த கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் பெண் பாதுகாவலர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், தி.மு.க. நிர்வாகிகளான பிரவீன் ( வயது 23) மற்றும் ஏகாம்பரம் ( வயது 24) ஆகியோர் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை அளித்தாக கூறப்படுகிறது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் போலீசார் கூச்சலிட்டதால் அந்த பொதுக்கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரையும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று இரவு உத்தரவிட்டார். இதையடுத்து, பிரவீன் மற்றும் ஏகாம்பரம் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டு எல்.பிரவீன் மற்றும் சி.ஏகாம்பரம் ஆகிய இருவரையும் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, நேற்று இரவு துரைமுருகன் பிறப்பித்த உத்தரவில், சென்னை தெற்கு மாவட்டம், கலைஞர் நகர் வடக்கு பகுதி 129வது வட்டத்தைச் சேர்ந்த எல்.பிரவீன் மற்றும் சி. ஏகாம்பரம் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெரயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அவர்கள் இருவரையும் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று உத்தரவிட்டிருந்தார்.
தி.மு.க.வின் பொதுக்கூட்டத்தில் பெண் போலீசுக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பிரவீன் மற்றும் ஏகாம்பரம் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியானது.
மேலும் படிக்க: Crime: கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த பெண் கார் ஏற்றி கொலை - இருவர் தப்பியோட்டம்
மேலும் படிக்க: Crime : ஒருதலை காதலால் பயங்கரம்...கல்லூரிக்குள் புகுந்து மாணவியை சரமாரியாக குத்திக் கொன்ற நபர்...பெங்களூருவில் அதிர்ச்சி..