தாம்பரம் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகளில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக “தளபதி விஜய் நூலகம்” புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்

 


விஜய் மக்கள் இயக்கம்



நடிகர் விஜய் தலைமையில் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இது விரைவில் அரசியல் கட்சியாக மாறலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் 100-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று இருக்கின்றனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு அணிகளும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. 






கடந்த ஜூன் மாதம் விஜய்  பிறந்தநாள் அன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தை நோக்கிய இந்நகர்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் அணி, ஐடி அணி, மகளிர் அணி என தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.  


மக்களிடம் நேரடியாக செல்லும் விஜய் மக்கள் இயக்கம்



கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் மக்களிடம் நேரடியாக பயனுள்ள, முக்கிய விஷயங்களை செய்ய விஜய் மக்கள் இயக்கம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.  அந்த வகையில் விஜய் மக்கள் இயக்கம்  சார்பில்  பல்வேறு மாவட்டங்களில்  விலையில்லா விருந்தகம் திட்டம் மூலம் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில்  வார இறுதி நாட்களில் பால் முட்டை ரொட்டி வழங்குதல்,  ஏழை குழந்தைகளுக்கு இரவு நேர பயிலகம்,  விழியகம்,  குருதியகம்,  உள்ளிட்ட முன்னெடுப்புகளை செய்து வருகிறது.




இதனைத் தொடர்ந்து,  கடந்த ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி பயிலகங்கள் தொடங்கப்பட்டன. தற்போது வரை தமிழ்நாட்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 124 பயிலகங்கள் வரை  திறக்கப்பட்டுள்ளது


 


தளபதி விஜய் நூலகம் - thalapathy vijay noolagam



விஜய் தனது மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறார். இது பெரும்பாலும் பாராட்டுக்குரிய ஒன்றாக உள்ள நிலையில், நடப்பாண்டு முதல் ஒரு புது முயற்சியை விஜய் மக்கள் இயக்கம் கையில் எடுத்து உள்ளது. அந்தவகையில், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக “தளபதி விஜய் நூலகம்” இன்று தமிழ்நாடு முழுவதும் 21க்கும் மேற்பட்ட இடங்களில் தொடங்கப்பட உள்ளது. இந்த நூலகத்தைத் தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதியில் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி.ஆனந்து துவக்கி வைத்தார்



 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த் : தளபதி மக்கள் இயக்கம் விஜய் சொல்லிக்கிணங்க விலை இல்லா விருந்தகம் விலை இல்லா ரொட்டி பால் திட்டம் தளபதி  பயிலகம் குருதியகம் விழியகம் சட்ட ஆலோசனை மையம் என பல்வேறு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம் அதன் தொடர்ச்சியாக தளபதியின் நூலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது  முதல் கட்டமாக 300க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது  இன்னும் 21 இடங்களில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்  மாணவர்கள் இந்த புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் அங்கேயே அமர்ந்து படிக்கலாம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் நூலகத்தில் உறுப்பினராகி எடுத்துச் செல்லலாம்.