நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி மக்கள் புத்தாடை வாங்குவதிலும், பட்டாசுகள் வாங்குவதிலும் மும்முரம் காட்டிவருகின்றனர். ஆனால், வேதிப்பொருள்கள் கலந்த பட்டாசுகளை வெடிக்கக்கூடாது, அதிகம் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது, சரவெடிக்கு தடை, காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசும் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அதிகம் சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழ்நாட்டில் அமலில் இருப்பதால் அதனை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். மீறுவோர்கள் மீது கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தது. இதனால் பட்டாசு வெடிப்பதில் ஆர்வமுடையவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜக்கி வாசுதேவ் ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பட்டாசு வெடிப்பது குறித்து பேசியிருக்கும் அவர், “நான் சில வருடங்களாக பட்டாசுகளை கொளுத்தவில்லை, ஆனால் நான் குழந்தையாக இருந்தபோது செப்டம்பரில் இருந்தே பட்டாசுகள் குறித்து கனவு காண தொடங்கிவிடுவோம். தீபாவளி முடிந்த பிறகு ஒன்று இரண்டு மாதங்களுக்கு பட்டாசுகளை சேமித்துவைப்போம்.
திடீரென்று சுற்றுச்சூழல் செயலில் ஈடுபடுபவர்கள் எந்த குழந்தையும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்று சொல்ல வேண்டாம். இது ஒரு நல்ல வழி அல்ல. சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து கவலைப்படுபவர்கள் அவர்களது அலுவலகங்களுக்கு நடந்து செல்லுங்கள்.கார் ஓட்டாதீர்கள். பெரியவர்கள் பட்டாசு வெடிப்பதை நிறுத்திவிடுங்கள். குழந்தைகள் பட்டாசு வெடித்து சந்தோஷமாக இருக்கட்டும்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Diwali Guidelines: தீபாவளிக்கு எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்? அரசு ஒதுக்கிய நேரம் இதோ!