தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்து கறாராக தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை:
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது, இதற்காக சென்னையில் மற்றும் பிற ஊர்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். ஏற்கெனவெ ரயில் மற்றும் அரசுப்பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது, மேற்க்கொண்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை:
அரசு பேருந்துகள், ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் தனியார் பேருந்துகளில் பயணிப்பது வழக்கம். தனியார் பேருந்துகளைப் பொறுத்தமட்டில் தீபாவளி, பொங்கல் பண்டிகை என்றாலே வழக்கமான கட்டணத்தை காட்டிலும் அதிகளவு கட்டணத்தை வசூலிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அரசு எச்சரிக்கை:
14.10.2025 முதல் 21.10.2025 வரையில் தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு விழாக்காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை ஆய்வு செய்து தணிக்கை அறிக்கை மூலம் உரிய தொடர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து ஆணையர் அவர்களின் அறிவுரையின் படி கீழ் காணும் வரன்முறைகளை பின்பற்றும் படி அனைத்து சரக இணைப்போக்குவரத்து ஆணையர்கள் /துணைப்போக்குவரத்து ஆணையர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,
1. எதிர்வரும் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.
2. அரசு பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகள் செல்ல சுங்கச்சாவடியில் தனி வழி (Separate Bay) அமைக்க சுங்க சாவடி அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சீரான வாகன போக்குவரத்தினை உறுதிசெய்ய தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
3. மோட்டார் வாகன ஆய்வாளர்களை சுங்க சாவடிகளில் பணியமர்த்தி அரசு பேருந்துகள் விரைவாக சுங்கசாவடியை கடந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது..4. அவ்வாறு சுங்கச்சாவடிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், பணியின் போது தமிழ்நாடு மற்றும் பிற மாநில ஆம்னி பேருந்துகளையும் ஆய்வு செய்து உரிய வரி மற்றும் ஆவணங்கள் நடப்பில் உள்ளதா என்பதை கண்டறிந்து, குறைபாடுடைய வாகனங்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள்
பயணிகள் கூடுதல் கட்டணம் மற்றும் பிற புகார்களுக்கு கீழ்காணும் எண்கள் மூலம் தொலைப்பேசி வாயிலாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்க வேண்டப்படுகிறது.
1. போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை - 1800 425 51612. இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (வடக்கு) -97893 696343. இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (தெற்கு)-93613 419264. இணைப்போக்குவரத்து ஆணையரகம், மதுரை-90953 663945. இணைப்போக்குவரத்து ஆணையரகம், கோயம்புத்தூர்-93848 083026. துணைப்போக்குவரத்து ஆணையரகம், விழுப்புரம்-96773 988257. துணைப்போக்குவரத்து ஆணையரகம், வேலூர்-98400 2301188. துணைப்போக்குவரத்து ஆணையரகம், சேலம்-78456 364239. துணைப்போக்குவரத்து ஆணையரகம், ஈரோடு-99949 4783010. துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருச்சிராப்பள்ளி-90660 3234311. துணைப்போக்குவரத்து ஆணையரகம், விருதுநகர்-90257 2380012. துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருநெல்வேலி-96981 1801113. துணைப்போக்குவரத்து ஆணையரகம், தஞ்சாவூர்-95850 20865
மேலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல், போக்குவரத்து துறையின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கையினை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.