தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன் காரணமாக சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பண்டிகைக்காக செல்வது வழக்கம். இதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்
இதையடுத்து, சென்னையில் இருந்து அரசு சார்பில் 11 ஆயிரத்து 176 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் வரும் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 14 ஆயிரத்து 16 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நவம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை 9 ஆயிரத்து 441 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கிழக்கு கடற்கரை வழியாக செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் 4 ஆயிரத்து 900 சிறப்பு பேருந்துகள் என தொடர்ந்து 3 நாட்களுக்கும் சேர்த்து 11 ஆயிரத்து 176 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 3 நாட்களுக்கு 2 ஆயிரத்து 910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14 ஆயிரத்து 86 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக நவம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் 3 ஆயிரத்து 165 சிறப்பு பேருந்துகள் என தொடர்ந்து 3 நாட்களுக்கு மொத்தமாக 9 ஆயிரத்து 441 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3 ஆயிரத்து 165 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 12 ஆயிரத்து 606 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
28ம் தேதி முதல் 30ம் தேதி வரை தீபாவளிக்காக இயக்கப்படும் பேருந்துகள்:
28ம் தேதி ( திங்கள் கிழமை)
தினசரி இயக்கப்படும் பேருந்துகள் – 2 ஆயிரத்து 092
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் – 700
மற்ற ஊர்களில் இருந்து - 330
29ம் தேதி ( செவ்வாய்)
வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் - 2 ஆயிரத்து 92
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் – 2 ஆயிரத்து 125
மற்ற ஊர்களில் இருந்து பேருந்துகள் - 1, 130
30ம் தேதி (புதன்கிழமை)
வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் – 2 ஆயிரத்து 92
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் – 2 ஆயிரத்து 75
மற்ற ஊர்களில் இருந்து பேருந்துகள் – 1 ஆயிரத்து 450
இந்த 3 நாட்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளான 6 ஆயிரத்து 276 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 7 ஆயிரத்து 740 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
கிளாம்பாக்கத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்களும் என மொத்தம் 9 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் முன்பதிவு செய்வதற்கு ஏதுவாக www.tnstc.in இணையதளம் மூலமாகவும், tnstc official app மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.