சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரி மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் வெளியேற்றத்தை குறைத்து, கொள்ளளவை உயர்த்துதல் குறித்து முக்கிய அறிவிப்பை நீர்வளத் துறை வெளியிட்டுள்ளது.
நீர்வளத் துறை அறிவிப்பு
புயல் எச்சரிக்கை ஒருபுறம் இருந்தாலும் மழை படிப்படியாக குறைந்து வருவதால், சென்னை குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய ஏரிகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் மிக முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டி, புழல் ஏரி, சோழவரம் ஏரி. செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஆகிய 5 நீர்த்தேக்கங்கள் நீர்வளத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய (30.11.2025) கொள்ளளவு (மிக.அடி)
பூண்டி எரி 35 அடியைக் கொண்டது. ஏரி முழு கொள்ளளவு 3231 மி.க. அடியாக உள்ளது. தற்போது நீரின் இருப்பு 2565 (79%) மி.க. அடியாக உள்ளது
செம்பரம்பாக்கம் 24.00 அடியை கொண்டது. முழு கொள்ளளவு 3645 மி.க. அடியாக உள்ளது. நீர் இருப்பு 2908 (80%) மி.க. அடியாக உள்ளது
புழல் 21.20 அடியை கொண்டது.3300 மி.க. அடியாக உள்ளது. தற்போது நீர் இருப்பு 2751 (83%) மி.க. அடியாக உள்ளது
சோழவரம் ஏரி 18.86 அடிய கொண்டது. அதன் முழு கொள்ளளவு 1081 மி.க. அடியாக உள்ளது. தற்போது நீர் இருப்பு 520 (48%) மி.க. அடியாக உள்ளது.
கண்ணன்கோட்டை ஏரி முழு கொள்ளளவு 36.61 அடியாக உள்ளது. இதன் முழு கொள்ளளவு 500 மி.க. அடியாக உள்ளது. தற்போது நீர் இருப்பு 438 (88%) மி.க. அடியாக உள்ளது.
மிகை வெள்ளம் (Flash Flood).
இந்திய வானிலை மையத்திலிருந்து தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து முன்னறிவிப்புகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில், 28.11.2025, 29.11.2025 மற்றும் 30.11.2025 ஆகிய நாட்களில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீர்பிடிப்பு பகுதியில் மழையின் அளவு கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு, அதி மழையினால் மிகை வெள்ளம் (Flash Flood) ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கையாக ஏரி மற்றும் நீர்த்தேக்கங்களின் தற்போதைய கொள்ளளவை குறைக்கும் நடவடிக்கையாக (Pre Empty) 27:112025 முதல் 29.112025 வரை மேற்குறிப்பிடப்பட்டுள்ள சரி மற்றும் நீர்த்தேக்கங்களிலிருந்து படிப்படியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
நீர் திறப்பு குறைப்பு
இன்று 30.11.2025 காலை நிலவரபடி சத்தியமூர்த்திசாகர் பூண்டி நீர்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 3000 கன அடியாகவும், புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 1000 கன அடியாகவும், சோழவரம் ஏரியிலிருந்து வினாடிக்கு 200 கன அடியாகவும் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 2250 கன அடியாகவும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம் நீர்தேக்கங்களில் போதிய வெள்ள தாங்கு திறன் (Flood Buffering Capacity) உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தீடீர் வெள்ளப்பெருக்கு(Flash Flood) ஏற்பட்டால், வெள்ள தாங்கு திறன் கொள்ளளவில் தேக்கி சென்னை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் படிபடியாக உபரி நீர் வெளியேற்றப்படும். தற்போது டிட்வா புயலின் தீவிரம் குறைந்துள்ளதாலும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள நீர்தேக்கங்களின் நீர்பிடிப்பு பகுதியில் மழையின் அளவு குறைந்துள்ளதாலும், நீர்வரத்து குறைந்துள்ளது.
எனவே சத்தியமூர்த்திசாகர் பூண்டி நீர்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 750 கன அடியாகவும், புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கனஅடியாகவும் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கன அடியாகவும் உபரிநீர் வெளியேற்றத்தை இன்று (30.11.2025) காலை 8.00 மணி அளவில் குறைத்து வெளியேற்றப்படவுள்ளது. தற்போது சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நீர்தேக்கங்களின் கொள்ளளவை படிபடியாக உயர்த்தப்படவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.