Today Weather Forecast Today (30-11-225): "திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது."
மெதுவாக நகரும் புயல் - Ditwah Cyclone Update
டித்வா புயல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை வடக்கு திசையில் இருந்து வடக்கு - வடமேற்கு திசை நோக்கி 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது தற்போது அது 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது இந்த புயல் ஜாஃப்னாவில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவிலும், வேதராண்யத்தில் இருந்து தென்கிழக்கு 80 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும், தெற்கு - தென்கிழக்கிலும், பாண்டிச்சேரியில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த புயல் தற்போது உள்ளது. 5 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து புயல் நகர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. கடலோரங்களில் குறிப்பாக வடமாவட்டங்களில், உள்ள கடலோரப் பகுதிகள் 80 கிலோ மீட்டர் வரை காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட் எச்சரிக்கை - Red Alert
திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில், இன்று (30-11-2025) மிக கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை - Orange Alert
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட வானிலை நிலவரம் - Thiruvallur Weather Forecast
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (30-11-2025) அதிதீவிர கனமழைக்கான ரெட் லெட்டெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாளையும் (01-12-2026) திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வானிலை நிலவரம் - Kanchipuram Weather Forecast
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இன்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மாலை வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை வானிலை நிலவரம் - Ranipet Weather Forecast
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (30-11-2025) கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தை பொருத்தவரை இன்று மதியம் 2 மணி முதல் இரவு வரை பல்வேறு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு வானிலை நிலவரம் - Chengalpattu Weather Forecast
செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை கடலோரப் பகுதிகளில் நேற்று முதலில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் இன்றும ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு பொருத்தவரை தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.