இரண்டு நாட்களாக சரியாக தூங்க முடியவில்லை, நான் அப்பள்ளியின் முன்னாள் மாணவன் என்பதால் மட்டுமில்லை, ஆனால் நான் இரு பெண் குழந்தைகளின் தகப்பன் என்பதால் - இவ்வாறு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தை உலுக்கி கொண்டிருக்கிறது பள்ளி  மாணவர்கள் இணைய வழி வகுப்பில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகபட்ட சம்பவம். சென்னையில் உள்ள அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் தான் தமிழக வீரர் அஸ்வின். இந்த நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை வெளியிட்டுள்ளார் அஸ்வின். அதில்  ராஜகோபாலன் என்ற ஒரு நபரின் பெயர் தற்போது வெளிவந்துள்ளது, ஆனால் இப்படிப்பட்ட சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் இருக்க நாம் அனைவரும் செயல்பட்டு முழுமையாக இந்த நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியது அவசியம் என கேட்டுக்கொண்டுள்ளார்.






அஸ்வின் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பிஎஸ்பிபி பள்ளியில் இருந்து வெளிவரும் செய்திகள் நெஞ்சை உழுக்குவதாக  அமைந்துள்ளது, ராஜகோபால் என்ற நபரை அத்தனை வருடங்கள் அங்கு பயின்றும் நான் அறிந்ததில்லை, இந்த செய்திகள் என்னை மிகவும் தொந்தரவு செய்கிறது" "எனக்கு தெரியும் நீதியும், சட்டமும் தன் கடமையை செய்யும், ஆனால் இது நாம் அனைவரும் தற்போது நிலவும் கல்வி சூழலை சரி செய்ய வேண்டிய காலம். இது ஒரு துன்பம் நிறைந்த காலம், இதில் நாம் நமது குழந்தைகளை வேறுவழியின்றி சமூக வலைத்தளங்களில் பயன்படுத்த அனுப்புகிறோம்"



"நாம் அனைவரும் ஒரு பாதுகாப்பான சூழலை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும், அங்கு சிறிய அளவில் அவர்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தாலும் கிரேட்ஸ் குறித்து கவலையின்றி உடனடியாக அதனை நம் பார்வைக்கு எடுத்து வர வேண்டும்"


"நம் குழந்தைகளே நம் சொத்து"


"கல்வி என்பது முக்கியமானது தான், ஆனால் அது மட்டும் வாழ்கை இல்லை, குழந்தைகளை தங்களின் மழலைத் தன்மையுடன் இருக்க வைப்போம், குழந்தைப் பருவத்திற்கு தேவையானதை செய்வோம்" என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் அஸ்வின். மாணவர்கள் வருங்காலம் சம்மந்தப்பட்ட இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறையும், கிவனமும் தேவை என்பதை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது அஸ்வினின் இந்த பதிவு!