மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று  13  பயனாளிகளுக்கு ரூ.7. 79 இலட்சம்  மதிப்பில்   பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


 


                                                                                                                                                                                                                        இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 493 மனுக்கள் பெறப்பட்டது.  இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 47  மனுக்கள் பெறப்பட்டது.


 


 


 




 


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட  மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


 


 




மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பாக 1 நபருக்கு ரூ.2780 மதிப்பில் காதொலி கருவிகளையும், 2 நபருகளுக்கு ரூ.1200 மதிப்பில்  ஊன்று கோலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கரூர் வட்டம், மணவாடி கிராமம் சரண்யா என்பவருக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும், முன்னோடி வங்கி இந்;தியன் ஒவர் சீஸ் வங்கியின் சார்பில்  8 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.7.75 இலட்சம் மதிப்பீட்டில் ஆடு வளர்ப்பு, பால்பண்ணை அமைப்பதற்கான வங்கி கடனுதவியும்,  வேளாண்மைத்துறை சார்பில்  குளித்தலைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு தொகுப்பு ஊதியத்தின் குழு ஒருங்கிணைப்பாளருக்கான பணிநியமண ஆணைகளையும் ஆக மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ7,78,980 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 


அதனைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் தாய்பால்  வார விழா முன்னிட்டு   நடைபெற்ற வினாடி வினா போட்டிகளில்  வெற்றி பெற்ற பரமேஸ்வரி, கீதா, ஜானகி ஆகியோர்களுக்கு  பரிசுகளும்  ஊரக வளர்ச்சித்துறைக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 10 வாகனங்களை அலுவலர்களிடம் ஆட்சியர் வழங்கினார்.