வடகிழக்கு பருவ மழைக்கான முன்னேற்பாடு ஆயத்தப் பணிகளில் ஒன்றான பயிர் காப்பீட்டுக்கு விவசாயிகள் முன் வர வேண்டும் என கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, பருவமழை காலங்களில் வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள் பாதிக்கும்போது அவர்களின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில் 2022-23 ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு வரவு செலவு திட்டத்தில் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் சம்பா பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக காப்பீடு செய்யுமாறு விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது கரூர் மாவட்டத்தில் சம்பா, நெல் 2 மற்றும் மக்காச்சோளம் பயிர்கள் சம்பா பருவத்திலும், சோளம் நிலக்கடலை மற்றும் கரும்பு பயிர்கள் குளிர்கால பருவத்திலும் ராபி அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
சம்பா மற்றும் குளிர்காலம் பருவ நெற்பயிருக்கு வரும் நவம்பர் 15ஆம் தேதி வரையிலும் மக்காச்சோளம் பயிருக்கு வரும் நவம்பர் 30ம் தேதி வரையிலும் காப்பீடு செய்யலாம். காப்பீடு கட்டணமாக நிற்பதற்கு ஏக்கருக்கு ரூ.557.23ம், மக்காச்சோளத்திற்கு ரூ.387.55ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, சம்பா பருவத்தில் சாகுபடிக்காக கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பெயர்களை தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு வங்கிகளில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற விவசாயிகள் பொது சேவை மையங்களில் (இ-சேவை மையங்கள்), தேசிய பயிர் காப்பீடு இணையதளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில் நேரிடையாக காப்பீடு செய்யலாம்.
முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், விஏஓ வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கள், இ அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். சம்பா, நெல் மற்றும் மக்காச்சோளம் பெயர்களை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது அயிரைக் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியை www.pmpfby.gov.in மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வங்கிகளையும் அணியில் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவ மழைக்கான ஆயத்த பணிகள் மேற்கொள்வது குறித்து அனைத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்களுடன் அமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டில் சுமார் 40 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பளவு காப்பீடு செய்யவும். சுமார் 26 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யவும், திட்டமிடப்பட்ட அதற்குண்டான நடவடிக்கைகள் வேளாண்மை மற்றும் உழவர் நல துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் வேளையில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மூலம் மிதமான முதல் கனமழை பெய்து வருவதால் பயிர் சேதம் அடைய வாய்ப்புள்ளது எனவும் இதனால் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக காப்பீடு செய்யும் மாறு விவசாயிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.